நெஞ்சத்துப் புண்ணிற்கு மருந்தளிப்போர் எவரோ - - - - சக்கரைவாசன்
நெஞ்சத்துப் புண்ணிற்கு மருந்தளிப்போர் எவரோ ?
*************************************************************************************
உடல்மீது நோவெனில் ஒத்தடம் போடலாம்
உடலினுள் நோயெனில் ஔ டதம் உண்ணலாம்
திடமிலாத் தடமான நெஞ்சத்தின் புண்ணிற்கு
தடவும் மருந்தளிக்க எவர்தான் வல்லவரோ ?