நிறங்களின் மறதி

எல்லா சாலைகளிலும்
ஒரு பயணம்
வழி தவறுகிறது....
--------------------------------------

மரண வீட்டுக்கு
வரும் அலைபேசியும்
அழுவதாகப் படுகிறது....
---------------------------------------

நிறங்களின் மறதி
கருப்பு
வெள்ளை....
--------------------------------------

காட்டித் தொலைத்த
பாதங்கள்
ஒற்றையடி பாதைகளில்....
-------------------------------------------

காமத்தை சுமக்க
முடியாதவன், காதலுக்குள்
நுழைவதேயில்லை.....
------------------------------------------------

தொடுவானத்தில்
தொட்டு நின்றது
அவரவர்க்கான கோடு
---------------------------------------

பறவையான பிறகு
அமரும் மரங்களெல்லாம்
போதியாகின்றன....
------------------------------------------

முதுகு மச்சத்தைப் போல
முயங்கி கிடக்கிறது
பூனைகள் கொண்ட
மதில் ஒன்றாய்
பின்னிரவு
அறைகதவு.....
-----------------------------------------------

கடைசி பேருந்தைத்
தவறவிட்ட
பாதை
மலை உச்சியில்
நடுங்கிக் கொண்டு நிற்கிறது....
---------------------------------------------------------

மார்பைக் குத்தும்
தாலி....
வன்முறை.
--------------------------------

யோசிக்க யோசிக்க
எறும்பானது யானை
குறும்பானது யோசனை...
----------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-Jan-16, 2:31 pm)
Tanglish : nirangalin maradhi
பார்வை : 126

மேலே