எதவாக இரு என்று
ஆண்டுகள் பல கடக்க
குமரி கிழவியாக
நினவு கூர்கிறாள்
தன் மண நாளை.
பெண் அழைக்கும் நேரம்
தாய் தன் மகளின் கையை
பிடித்து சொல்கிறாள்
எதவாக இரு என்று.
பெண்ணும் தலையை
பலமாக ஆட்டுகிறாள்
எதும் புரியாமல்
கண்ணீரை அடக்கிய படி.
அவள் நான் தான்
எதவாக என்ற சொல்
ஆயிரம் பொருள்
உள்ளடங்கியது என்று
தெரியவில்லை அன்று.
எதவாக என்ற போது
பார்த்துப் பதிவசாக
பொறுத்துப் பொறுமையாக
என்று கொள்ள விளைந்தேன்
அதே போது சொன்ன விதம்
கவனமாக வாழ்க்கை
நடத்து விட்டுக் கொடுத்தும் விட்டுக்
கொடுக்காமையும் அறிந்து என்றாக
ஆண்டுகள் பல கடக்க
என் தாயின் ஒரு சொல்
பல விதப் பொருள் அளிக்க
நினைக்கிறேன் பெருமிதத்தோடு.
வாழ்கையில் பல இன்னல்கள்
பல போராட்டங்கள்
எதவாக எதிர்கொண்டேன்
பெருமையுடன் பார்க்கிறேன்
என்னையே