மனம்

மனிதனுக்குள்
தான் வசிக்க
கடவுள் ஏற்படுத்திய
ஆசனம்!
நல்லோரையும், தீயோரையும் வேறுபடுத்தும்
வேற்றுமை பாலம்!
சான்றோர் சமுதாயத்தை
இணைக்க உதவும்
ஒற்றுமைப் பாலம்!
நல்லோருக்கு கடவுள்
போட்ட கடிவாளம்!
நேர்மையாளருக்கு
தீமையெனும்
வேண்டா பதரை
சுட்டெரிக்க உதவும்
தீப்பந்தம்!
நேர்மையற்றோருக்கோ
அது உள்ளிருந்தும்
ஊமையாகி வாழும்
நடைபிணம்!
நேரம் வரும்பொழுது
குத்தல் கொடுக்கும்
கடவுளின் ஆயுதம்!
தீயவர்கள் உள் வாழும்
தக்க கூண்டினில்
நிற்க வைத்து
கேள்வி கேட்கும்
நீதிமன்றம்!
தன்னை வருத்துவோரின்
எதிர்காலத்தை
இருளாக்கும்
உண்மையின் அடையாளம்!
உரிய காலத்தில்
தக்கன செய்வோரின்
உடலிற்கோ
அது கடவுளால்
அருளப்பட்ட
ஓர் ஒப்பற்ற
மணிமகுடம்!
உண்மையெனும்
உயரிய குணத்தை
ஏற்றி தெளிக்க முயலும்
ஏற்றமிகு ஏற்றம்!
ஒரு மனிதனை
சக மனிதரிடமிருந்து
வேறுபடுத்தும்
வேற்றுமை சின்னம்!
மனிதனுக்கு மனிதன்
மாறுபடுத்தி
அமைக்கப்பட்ட
கடவுளின்
கைவண்ணம்!
படைக்கப்பட்ட நோக்கமோ
நன்மைகளை உள்வாங்கி
தீயதை விட்டெறிய
வளப்படுத்தும்
எண்ணம்!
தன்னுள் தோன்றிய
சிந்தனைகளை
செயல்களாக்க
மனிதரை வருத்தும்
நெஞ்சம்!
தன்னை அடிமைப்படுத்தி
அறிவின்
துணைக்கொண்டு
செயல்படுவோரிடம்
அது அடையும்
என்றும் தஞ்சம்!
இதை நல்வழியில்
பயன்படுத்துவோர்
வாழ்விலில்லை
சீற்றம்!
அன்னோர் காண்பரென்றும்
ஏற்றம்!
தானமைத்து கடவுள் ஆளும் சபை
இதனுள் ஒழுக்க
நெறிகளே தலை இதனில்
நேரக்கூடாதென்றும்
பிழை இதுவன்றோ
திண்ணம்!
உளப்பாங்குக்கு
ஏற்றவாறு
கலைகளை ஏற்று
வெளிக்கொணரும்
கவித்துவ அன்னம்!
'யாவரும் ஓர்
குலம்;யாவரும்
ஓரினம'மென்றே
பொதுவுடமைபான்மை
உடையோரின்
உள் விளங்கும்
அணையா தீபம்!
'மனம் ஒரு குரங்கு' என்றே ஞானிகளின் நாவினில்
வசைப்பாடலாய்
தோன்றிய
நிலையற்றவைகளின்
ஒட்டுமொத்த உதிரம்!
சான்றோரின் உடலினுள்
ஆட்சி செய்யும்
செங்கோல்...
ஏற்றத்தாழ்வு
கற்பிப்போர்
உள்ளத்தை ஆக்கிரமிக்கும்
பாத்திரம்!!!
********************