சித்திரமும்,செந்தமிழும் பழமொழி கவிதைகள் - பாகம் -1
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
ஆயினும்
சில சித்திரங்கள்
படைக்கச் சொல்லும்
விசித்திரங்கள்
அவை மொழிப்பெயர்க்கும்
ஆயிரம் மெய்கள்
வாழ்வின் அர்த்தங்கள்
வீழ்வின் காரணங்கள்
அதன் உச்சக்கட்ட கற்பனைகள்
என்றோ ஓர்நாள் நிதர்சனங்கள்
ஓவியரின் கற்பனையில் தோன்றியது
மொழியால் விரிவடைந்தபோது
கவிதையாய் சொன்னது
சில்லறைக்காக மரங்களை
வெட்டிடில் நாம்
கல்லறைக்கு குடிபெயர நேரிடும்
வசிப்பிடங்களை வனப்பாக மாற்றும்
இருப்பிடங்களை வளமாக மாற்றும்
மரங்கள் இன்றிடில்
வனங்களாக பாலைவனங்களாக
வாழ்ந்திடும் புவி
கலைகள் இரண்டும்
கைகோர்த்து கேட்பது ஒன்று
மரங்களை வெட்டாதீர்