என்னடா உம் பையன்களுக்கு சந்து பொந்து-ன்னெல்லாம் பேரு வச்சிருக்க
என்னடா உம் பையன்களுக்கு சந்து பொந்து-ன்னெல்லாம் பேரு வச்சிருக்க?
======================================================================
ஏண்டா பேரா தமிழரசா, உன்னோட ரட்டைப் பையன்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கீங்க?
====
பாட்டி, மூத்தவம் பேரு சந்த். எளையவம் பேரு பந்த்
===
என்னடா உம் பையன்களுக்கு சந்து பொந்துன்னெல்லாம் பேரு வச்சிருக்க?
===
இல்ல பாட்டி, சந்த், பந்த் –ன்னு தான் சொல்லணும்.
====
என்னால சந்து, பந்து-ன்னு தான் சொல்லமுடியும். எங்கடா கெடைக்கது இந்தப் பேருங்கெல்லாம் உங்களுக்கு?
==
இதெல்லாம் இந்திப் பேருங்க பாட்டி, இப்பெல்லாம் படிச்சவங்க அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறது தாம் பாட்டி நாகரிகம். படிக்காதவங்க, பட்டிக்காட்ல இருக்கறவங்ககூட சினிமாப் பாத்திட்டு அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தாம் பாட்டி வைக்கறாங்க. உங்களுக்குத் தெரியாதா?
==
ஆமாண்டா நம்ம கிராமத்லெ கூட ஒரு பொண்ண சுவதா, சுவதா –ன்னு கூப்படறாங்கடா.
===
சுவதா இல்ல பாட்டி. ஸ்வேதா. ஸ்வேதா-ன்னா வெள்ளச்சி, வெள்ளையம்மா-ன்னு அர்த்தம் பாட்டி.
==
அது சரி. நீ பெத்த சந்துக்கும் பந்துக்கும் என்னடா அர்த்தம்?
====
பாட்டி, சந்த் –ன்னா நிலா, ஒளிர்கிற, ஒளிவிடுகிற –ன்னு அர்த்தம்.
========
பந்த் –ன்னா என்னடா அர்த்தம்?
=====
பந்த் –ன்னா (குரு காட்டிய) வழி- ன்னு அர்த்தம் பாட்டி.
===
பையங்க பேருங்களோட அர்த்தமெல்லாம் நல்லாத்தான் இருக்குது. இந்திக்காரங்க அவுங்க பிள்ளைங்களுக்கு நம்ம தமிழ்ப் பேர வைப்பாங்களா? ஏண்டா எல்லாம் நாம பெத்த பிள்ளைங்களுக்கு நம்ம மொழில பேரு வைக்காம புலியைப் பாத்து பூனை சூடு வச்சுக்கற மாதிரி தமிழ்க் கொழந்தைங்களுக்கெல்லாம் இந்திப் பேருங்கள வச்சுக்கறீங்க?
===
என்ன பாட்டி செய்யறது? நம்ம தமிழர் பண்பாடே திசை மாறிப் போயிட்டு இருக்குது. நா மட்டும் தனிச்சு நிக்க முடியுமா?
----------------------------------------
Chand means छंद moon, shining
Panth पंथ means the path shown by a Guru.
-------------------------------------------------------------------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.
=====================================================