வெல்லும் - கொல்லும்

சிறுசொல்லும் என்னை வெல்லும் - உன்
சுடுசொல் மெல்ல என்னைக் கொல்லும்.
சிறுபுன்னகையும் என்னை வெல்லும் - உன்
சுடுபார்வை மெல்ல என்னைக் கொல்லும்.

சின்னச்சிணுங்கல் என்னை வெல்லும் - உன்
கொஞ்சல் மெல்ல என்னைக் கொல்லும்.
ஓரப்பார்வை என்னை வெல்லும் - உன்
காரப்பார்வை மெல்ல என்னைக் கொல்லும்.

அலங்காரம் என்னை வெல்லும் - உன்
சிருங்காரம் மெல்ல என்னைக் கொல்லும்.
அதிகாரம் என்னை வெல்லும் - உன்
இளக்காரம் மெல்ல என்னைக் கொல்லும்.

ஊக்கம் என்னை வெல்லும் - உன்
ஏக்கம் மெல்ல என்னைக் கொல்லும்.
நெருக்கம் என்னை வெல்லும் - உன்
தயக்கம் மெல்ல என்னைக் கொல்லும்.

இணக்கம் என்னை வெல்லும் - உன்
பிணக்கம் மெல்ல என்னைக் கொல்லும்.
மார்க்கம் என்னை வெல்லும் - உன்
மயக்கம் மெல்ல என்னைக் கொல்லும்.

பரிசம் என்னை வெல்லும் - உன்
அச்சம் மெல்ல என்னைக் கொல்லும்.
நேசம் என்னை வெல்லும் - உன்
வேசம் மெல்ல என்னைக் கொல்லும்.

- செல்வா

எழுதியவர் : செல்வா (25-Jan-16, 12:52 am)
பார்வை : 74

மேலே