உன்னதமான கலை

கலையின் பிறப்பிடம் எங்கு
ஆராயும் போது தோன்றிய
சில பல எண்ணங்கள்
ஒன்றொன்றாக தொகுத்து
கண்டேன் முடிவை.

அறிவும் இதயமும்
ஒன்றுக்கொன்று
போட்டியிட நின்றேன்
சற்று நேரம் அசையாமல்
தொடர்ந்தேன் என் வழியிலே.

மனம் தான் என்று
மேலோங்க அறிவை
ஆசுவாசப் படுத்த
முயன்றேன் பல முறை
வலி மிஞ்சியது .


போகட்டும் அது எப்படியோ
இதயம் பொறுத்து வெளி வரும்
சிற்பமோ, எழுத்தோ,
ஓவியமோ , இசையோ
தன்னிகரற்று திகழும்.

உள்ளிருந்து வரும்
உணர்ச்சிக் குவியல்
வெள்ளம் போல்
உடைப்பெடுத்து பீறிட
கலையை வடிக்கிறான் கலைஞன்.

அவனின் தூரிகையில்
வண்ணமாகக் கொணர்ந்து
எழுத்தில் காவியமாக
வெளியிட்டு இசையில்
தெய்வீகமாக எழும்பி
உன்னதமான் கலை
படைக்கிறான் திறனோடு.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (25-Jan-16, 11:10 am)
பார்வை : 1869

மேலே