நேசத்தின் கண்ணீர்த்துளி

பேச துடிக்கும் இதயம்,
பார்க்க துடிக்கும் கண்கள்,
பதறி தவிக்கும் இவைகளை கண்டு,
பாயும் கண்ணிர்த்துளிகள் !

அவர் அங்கே இருக்கும் நிலை,வேலை என்ன என்று,
அறிந்திருந்தும் மனம் அது,
அழைத்துப்பார் என்று என்னை,
அனுதினமும் கொல்ல,
அழைபேசியினை கையில் எடுக்கிறேன்,
ஆனால் ஏனோ என்னால்,
அவரை அழைக்க முடியவில்லை,
அறியாது இடுக்கண் கொடுக்கலாம்,
அறிந்தும் குரல் கேட்க - வேலையினை
அழிக்க நான் அவர் காதலி,
அல்ல மனைவியாயிற்றே,
ஆவலாய் அவரே அழைப்பாரா என்று,
அமைதிக்கொண்டு விழி மூடாது,
அமர்திருந்தேன் அழைபேசியின் முன்னே,

நிலைமாறாத என் கண்களின் நோக்கம்,
நிலைமாறியது மகிழ்ச்சியாக,
நினைத்தபடி அழைபேசியின் ஓசைகேட்க,
நொடியும் தாமதியாது கையில் எடுத்தேன்,
நலமா ? என்ன செய்கிறாய் என்று அவர் கேட்க,
மௌனமாய் ம்ம் என்றேன்,
ம்ம், என்ன இது இதுவரையிலும் நினைத்து,
மனத்தால் என்னை அழைத்து இப்பொழுது,
மௌனமா ? என்று சிரித்து,
மாலை வந்து பேசுகிறேன், சென்று சாப்பிடு என்றார்,

மகிழ்ச்சி அது புரண்டோட,
மணவாளன் அவன் நேசத்தினையும்,
மௌனத்தை விரித்துரைக்கும்,
மனதினையும் கண்டு வியப்பில்,

நேச குமாரனை நினைத்து
நேசத்தின் கண்ணீர்த்துளிகள் !!!

எழுதியவர் : ச.அருள் (25-Jan-16, 11:48 am)
பார்வை : 436

மேலே