தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து8---ப்ரியா

(முன்கதை சுருக்கம்:வசந்துடன் ரியா வெளியூருக்கு கிளம்பிவிட்டாள்...காரில் அவனோடு பயணிக்கும் சமயம் கீது கால்பண்ணவே அவளையும் அறியாமல் வந்தனாவின் பெயரை உச்சரித்துவிட்டாள்...கீதுவின் ஊரிலிருந்து அவளது பாட்டிக்கு உடம்புக்கு முடியவில்லை என அழைப்பு வருகிறது...????)

கீதுவிடம் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது வந்தனாவின் பெயரை சொல்லிவிட்டா ள் ரியா....ஏதோ யோசனையில் திரும்பி பார்த்தவனை யோசிக்கவிடாமல்.....ரியாவே முந்திக்கொண்டாள் "என் ஒரு தோழியின் பாட்டிக்கு உடம்பு சரி இல்லை என்று ஊரிலிருந்து அழைப்பு வந்திருக்கிறதாம் அதைத்தான் என்னிடம் சொன்னாள், என் இன்னொரு தோழி தனியாக இருக்கிறாள்....... நானும் இல்லாமலிருப்பது அவளுக்கு இன்னும் கஷ்டமாக இருக்கும் அதுதான் அவளையும் அழைத்துவிட்டு செல் என்று சொன்னேன்"என்று என்னவோ சொல்லி சமாளித்தாள் ரியா.

நீ உன் தோழிகளுடனா தங்கியிருக்கா?என்றான்.

ஆமா!என்றாள்.

உன் அப்பா அம்மா?

அவங்க மேல இருக்காங்க என்று ஆகாயத்தைக்காட்டினாள்.......

சாரி!உன் சொந்த இடம் எங்கே?நீ ஏன் இங்கு தனியா வந்து இருக்கா சொந்தக்காரங்க கூட இருக்கலாம் இல்ல, வயசுப்பொண்ணு இப்டி தனியா இருக்கலாமா?என்று பரிவுடன் கேட்டான்.

தன் ஊரைப்பற்றி சொந்தக்காரங்களின் லீலைகளைப்பற்றியும் தெளிவாய் சொன்னவள்,தன் தோளிகளைப்பற்றி மட்டு சுருக்கமாய் சொன்னாள்.

அப்படியே அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவன்......சரி விடுங்க எல்லாம் அவன் வைக்கும் பாதை, அதன் வழியாய் தான் நாம் சொல்ல வேண்டும் அதான் நியதி......பழையதெல்லாம் நினைக்காதீங்க சந்தோஷமா இருங்க என்று ஆறுதல்படுத்தினான்.....!

இப்பொழுது இந்த நொடி அவனது பார்வை வித்தியாசமாக இருந்தது???????

அநியாயத்துக்கு பாவமா இருக்கானே?என்று மனதிற்குள் நினைத்தவள் அவனது பார்வையை விலக்குபவளாய்...வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்..!

இவளுக்கு அவன் மீது எந்த அளவுக்கு வெறுப்போ?அந்த அளவுக்கு அவளுக்கு அவனை பிடிக்கவும் செய்திருந்தது....அனால் அது ஏனென்று அவளுக்கே தெரியவில்லை??????

சிறிது நேரம் பயணம் முடிந்தது ஒரு கடையின் முன்பு காரை நிறுத்தியவன் அவளை இறங்க சொல்லி தேவையானதை வாங்குங்கள் காரில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்றான்!

அவன் ஒரு பாட்டில் தண்ணி வாங்கிக்கொண்டான், அவளும் இருவருக்கும் சேர்த்து இட்லி ஒரு பார்ஷல் வாங்கிவிட்டு வந்தாள்...!

சாப்பிடுவதற்கு வசதியாய் பின்னிருக்கையில் இருவரும் அமர்ந்துகொண்டனர்...சாப்பிடும் போது அவன் நீ எப்போதுமே ரொம்ப அமைதி டைப் தானா?யாரிடமும் ரொம்ப பேசமாட்டியா?ஆடம்பரமெல்லாம் பிடிக்காதா?என்று கேட்டான்?

இல்லை!அளவாய்தான் தான் நான் பேசுவேன்,அளவுக்கதிகமாய் பேசினால் தேவை இல்லாமல் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்,ஆடம்பரமெல்லாம் உங்களை மாதிரி பிரபல பணக்காரர்களுக்கு தான் சரி ஆகும்....நாங்களெல்லாம் பணமிருந்தாலும் எங்களோட கிராமத்து பாணியில் தான் நாகரிகமா இருப்போம் என்று உள்குத்து வைத்து பேசினாள்.......!

அப்பொழுது அவன் முகம் ஒருநிமிடம் மாறதான் செய்தது....ம்.......நீ சொல்வதும் ஒரு விதத்துல உண்மைதான் என்றான்........

ஒரு விதத்துல இல்ல சார் எல்லா விதத்துலையும் உண்மைதான் என்று சொல்லி மெல்லிய புன்னகை செய்தாள்.

அவளைப்பார்த்துக்கொண்டிருந்த அவன் சூப்பர்... ரொம்ப ரொம்ப அழகாயிருக்கீங்க,இந்த கலர் புடவையில அழகோ..அழகு என்று சொல்லி அவனும் சிரித்தான்.....

வெட்கத்தில் ரியா முகம் சிவந்தது,பதில் பேசாமல் அவனது பேச்சையும் கவனியாதது போல் இருந்தாள்....!

அதிகாலையில் இருவரும் போய் சேர்ந்தனர்,விடுமுறை காலமென்பதலால் இவன் நினைத்ததை விட நெருக்கடி அதிகமாகவே இருந்தது,பேசி சமாளித்து எப்படியோ ஒரு அறை புக் பண்ணிவிட்டான்......

சூழ்நிலை அவளுக்கு புரிந்தது எனவே அவள் அதை பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை.

அறைக்குள் சென்றதும் நீ போய் குளிச்சிட்டு ரெடியாகு அதற்குள் நான் கடை வரைக்கும் போயிட்டு வாரேன் என்று சொல்லி அவன் வெளியே சென்றான்......!

சரி என்றவள்.... இவள் வேலைகளை முடித்துவிட்டு ரெடி ஆகிவிட்டாள் ஆனால் அவனை காணவில்லை வெகு நேரமாகிவிட்டது. மாலை 4மணிக்கு மீட்டிங் என்று சொன்னார் மணி 2.30ஆகிவிட்டது....பொறுமையிழந்தவளாய் அவனுக்கு அழைப்பைக்கொடுக்க செல்போனை பார்த்தாள் அவளது செல்போன் காணாமல் போனது அப்போதுதான் தெரிந்தது என்ன பண்ணுவதென்று புரியாமல் யோசித்துக்கொண்டிருக்கும் போது அவன் வந்து சேர்ந்தான்.

என்ன ரெடியா?என்றான்.

எஸ்!சார் இவ்ளோ நேரம் எங்கே போனிங்க? என்னோட செல்போன் உங்க காரில் வச்சிட்டேன்னு நினைக்கிறேன் என்பதற்குள்.....

தன்கையிலிருந்த அவளது செல்போனைக்கொடுத்தான்.....நான் கடைக்கு போகும் போது என் நண்பனைப்பர்த்தேன் அதான் அவன் வீட்டுக்கு போயிட்டு வரேன்......நீங்க சாப்டீங்கதானே?என்றான்?

இல்லை! டிபன் சாப்டேன் மதியம் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன் இன்னும் சாப்பிடவில்லை.....

இந்தாங்க சாப்பிடுங்க அப்புறம் கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு தன் கையிலிருந்த சாப்பாட்டு பார்சலை அவள் கையில் திணித்துவிட்டு அவனும் ரெடி ஆகினான்...!

மனதிற்குள் ஒருநிமிடம் அவனைப்பற்றி நல்ல எண்ணங்கள் வந்தாலும் வந்தனாவின் குமுறல்கள் நினைவுக்கு வரவே இவனை முற்றிலும் வெறுத்தாள் ரியா....!

இருவரும் சரியாக 3.15க்கு இங்கிருந்து தன் திறமையை வெளிப்படுத்தக்கூடிய அந்த பிரபல நிறுவன தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள விரைந்தனர் வழக்கத்தை விட அவன் சற்று மனவலிமையற்று காணப்பட்டான் என்பது அவனது செய்கையின் மூலம் தெரிந்துகொண்டாள் ரியா....!

அவனை ரிலேக்ஸ் பண்றதுக்காக அந்த 40 நிமிடங்கள் அவனிடம் நம்பிக்கையூட்டும் பாணியில் பேசிக்கொண்டிருந்தாள்....அவன் மனதில் அவள் பேச்சுக்கள் பதியவில்லை என்பது அவளுக்கு புரிந்தும் சும்மா பேசிக்கொண்டிருந்தாள்....!
_____________________________________________________________________________________________________________

வந்தனாவை எப்படி எல்லாமோ பேசி தன்னுடன் வா என்று அளைத்துப்பார்த்தாள் கீது அனால் அவள் வருவதாக இல்லை....!

முயற்ச்சியில் தோற்றுதான் போனாள் கீது...!

சரி!நீ வரவேண்டாம் நான் கிளம்புறேன் உன்கிட்ட இதுக்க மேல பேசிட்டிருந்தா என் பாட்டி மேல போயி 4 நாட்கள் ஆன பிறகுதான் நான் ஊருக்கு போய் சேருவேன் எனக்கு சாப்பாடு எடுத்து வை நான் கிளம்புறேன் என்று சொல்லி கீது கிளம்பத்தயாரானாள்......

அப்பொழுது அவளுடைய அலுவலக நண்பரிடம் போனில் பேசிக்கொண்டே தன் துணிமணிகளையும் பேக்கில் எடுத்து வைத்துவிட்டிருந்தாள்.......வந்தனாவும் கீதுவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வழியனுப்பி வைத்தாள்.....

இவள் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தாள்.....ரயில் நிலையம் வரவே ஆட்டோவை ஒதுக்கினான் ஆட்டோக்காரன் அப்பொழுது எதிரே ஒருவன் பைக்கில் வந்து கொண்டிருந்தவன் திரும்பி பார்த்து யாருக்கோ கைக்காட்டும் சமயம் இவள் ஆட்டோ மீது மோதிவிட்டான்........

இதுவேறயா???? என்றவள் இறங்கி வந்து பார்த்து வரக்கூடாத என்று அவனை ஒரு முறை முறைத்து வந்தனாவின் கோவத்தை இவன் மீது காட்டிவிட்டு சென்றாள்.....!

அவன் இவளைப்பார்த்ததுமே முகத்தை வேறு பக்கமாகத்திருப்பிக்கொண்டு போய்விட்டான்.

ஒரு மன்னிப்பு கேட்கிறானா? திமிரப்பாரு? என்று பேசிக்கொண்டே தன் உடமைகளை எடுத்துக்கொண்டிருந்தாள்.

இந்த காலத்து பசங்களே இப்டிதான்மா ஒருத்தன் உயிருக்கு போராடிக்கிட்டிருந்தாலும் கண்டுக்காம போயிருவாங்க மனசாட்சி இல்லாதவங்க என்று பதிலுக்கு ஆட்டோக்காரனும் புலம்பினான்....!

அடுத்த ரயிலில் தன் ஊருக்கு சென்றுகொண்டிருந்தாள் கீது....மனதிற்குள் தன் தோழிகளைப்பற்றிய சிந்தனையுடன் இருந்தாள்.....

முன்பெல்லாம் எப்போது ஊருக்கு அழைத்தாலும் தோழிகள் உடனே வருவார்கள் இப்பொழுது இந்த அளவுக்கு கெஞ்சியும் வந்தனா வரவில்லை......இதை ரியாக்கிட்ட சொல்லவும் முடியவில்லை....

வந்தனா ஏன் இவ்வளவு மாறிவிட்டாள்????????என்று யோசனையிலிருந்து மீண்டவள் தன் சொந்த மண்ணை அடைந்தாள்!

ஊருக்கு சென்ற கீதுவுக்கு அதிர்ச்சி.......காரணம் பாட்டியும்,அப்பா,அம்மா என மற்ற உறவினர்களும் நல்லபடியாகத்தான் இருந்தனர் வழக்கத்தை விடவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றன என்ன காரணம் எதற்காக நம்மை உடனே அழைத்தார்கள் என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள் கீது........... !


தொடரும்......!

எழுதியவர் : ப்ரியா (25-Jan-16, 1:21 pm)
பார்வை : 322

மேலே