எனக்காக பிறந்தவளா 6

Episode 6 : எனக்காக பிறந்தவளா ???

இன்றைய கல்லூரி நாள் இத்தனை விரைவில் கடந்தது கூட அவனுக்கு தெரியவில்லை . அவன் mobile அதிரத்தொடங்கியது மைதிலியிடம் இருந்து ஒரு miss call மற்றும் நிறுவனதிடம் இருந்து இரு msg வந்தது .ஒரு கனம் சந்தோஷம் மைதிலிக்கு அவசரமாக call செய்கிறான் .

மைதிலி : வசந்த் உன்ன பாக்கனும் வசந்த் . எங்க இருக்க ??
வசந்த் : சொல்லு மைதிலி என்ன ? Anything urgent ?
மைதிலி : ஏன்ன anything important தான் பேசுவிங்களா , sir அவ்ளோ busy ah ??
வசந்த் : என்ன விஷயம்னு சொல்லு மைதிலி .
மைதிலி : உன்ன just பாக்கனும் அவ்ளோதான் வேற எந்த reason இல்ல வசந்த் .
( வசந்திற்க்கு அது கனவா ! நிஜமா ! என்ற சந்தேகம், கூட சந்தோஷம் இருமுறை கிள்ளி பார்த்துக்கொண்டான் இன்பத்தில் முதல்முறை வலி தெரியாததாள் .
வசந்த் : இதோவே வர நீ எங்க இருக்க மைதிலி .
மைதிலி : உனக்கு oppositeல தான் நிக்கற தெரியறன , sir அப்படி என்ன deep ah யோசிசுன்னு வாரீங்க ? ( phone-il )
(உன்னதானு சொல்ல நினைத்தான்)
வசந்த் : பாத்துட டியர் .
மைதிலி : நான்தான் first பாத்தனே !
( phoneஐ cut செய்து நேரில் சந்தித்துக்கொண்டனர் )
மைதிலி : என்ன வசந்த் oppositeல யாரு இருக்காங்கனு கூட தெரியாம, அப்படி என்ன சிரிப்பு நடக்கும்போது ?? ( அவளின் இந்த கேள்வியில் கொஞ்சம் கவலை நிறைய காதல் இருந்தது )
வசந்த் : லவ்..வு.. லவ்..வுனு.. சொல்வாங்க இல்ல அதா மைதிலி ரொம்ப படுத்துது .
மைதிலி : பார்றா ! but over feel ah இருக்கு உன் feeling ,தாங்கல .
வசந்த் : thats call true love dear .
மைதிலி: போதும் உன் லவ் புரானம் change the topic !
வசந்த் : சொல்லு மைதிலி எதோ பாக்கனும்னு சொன்ன பாத்துட போதுமா?
மைதிலி : ஓய் ! bad boy நீ, போ இனி உன்கூட பேச மாட்ட .
வசந்த் : என்ன பொண்ணுகளோ போங்க பாக்கனும்னு சொல்வாங்க பாத்த பேச மாட்டன்னு சொல்லுவாங்க !
மைதிலி :ஓய் ! எதோ oppositeல ரொம்ப பாவமா வந்துனு இருந்த சரி ஒரு shock தரலாம்னு கூப்ட,அதுக்கு இப்படிதா கேட்பியா ??
வசந்த் : pass this question
மைதிலி : அட செமா brillient ah பேசுற போ.
வசந்த் : உங்க அளவுக்கு இல்ல பா
மைதிலி : என்கூட பேசுற இல்ல, சிகரம் நீயும் என்ன மாறி பேச கத்துப்ப .
( வசந்திற்க்கு இப்படி பேசிக்கொண்டே இருப்பது அறுவையாக இருந்தது )
வசந்த் : bore அடிக்காத டியர் .
மைதிலி : என்னயா , போசுக்குனு இப்படி சொல்லிட.
வசந்த் : umm ! உனக்கு நான் friend ah இருக்க so நீ வாய் ஆடுற , but நீ எனக்கு lover ah போய்யிட்ட பேச தோனல உன்ன ரசிசுனே இருக்கனும்னு தோனுது .
மைதிலி : உன் லவ் ah விடமாட்ட போல இருக்கே!!
வசந்த் : ok ! விடு, ஏன் இங்க தனியா நின்னுட்டு இருந்த ?
மைதிலி : அதுவா வசந்த் busல வீடுக்கு போய்னு இருந்த, ஜன்னல உன்ன பாத்த, நீ சிரிச்சுனே தனியா வந்துனு இருந்த so இறங்கிட !

காதல் காதல் காதல் அவன் மனசுகுள் இதமாக மெதுவாக வலியொடு அழமாக பெண்னே ஏன் இப்படி? எனக்காகவா ?? நீ ஒரு முறை எனக்காக சிரிச்சாலே என்ன வேண்டுமானலும் செய்வேன் . இனி என்ன நான் செய்வது அன்பு அதிகமாகியது கண்னே !

உன்மேல் கொண்ட இந்த அன்புக்கு உன்னை கட்டி அனைத்து ஒரு முத்தம் திரும்பவும் முத்தமிட்ட இடத்தில் இன்னோறு முத்தமிட்டு . உன் கண்களுக்குள் சென்று என் நெஞ்சுக்குள் உன் உயிரை பூட்ட வேண்டும் என்றெல்லாம் அவனை அறியாமல் அவன் உண்ர்வுகள் அவனுக்குள் உருவேடுத்தது .

வசந்த் : எனக்காகவா மைதிலி ( காதலோடு )
மைதிலி : plus part of traffic , bus ஒட்டுறாங்கல இல்ல தேர் ஊர்வாளம் போறானுகலனு தெரியல என்று நடந்து முன்னே செல்கிறாள்

( போய் வசந்த் லாம் ஒரு சாக்கு, அவள் இறங்கி இருப்பா, அவ உனக்காகவே பிறந்தபெண் வசந்த் என்று வசந்திற்குள் ஒரு வசந்த் மறுமுகம் காட்ட )

ஆமா அவ எனக்காகவே பிறந்தவ கண்ணுக்கு தெரியாத கடவுளால் என் மனதை திறக்க பிறந்தவள் என்று வசந்த் நினைத்துக் கொண்டான் .எனக்காக என் கண்களுக்காக இவள் வடிவமைக்கப்பட்டவள், என் மூச்சுக்கு சொந்தமானவள், என் உயிரொடு இணைந்திட வந்தவள் .இதோ இந்த கூந்தல் கூட எனக்காக தான் என்று கூந்தலை பார்த்துகொண்டு நடந்தான் . என் தலைமுடியை கோதுவதற்க்கு என் கண்ணங்களை தடவவும் என்னை அரவனைக்கவும் என் கைபிடித்து நடக்கவும் உருவானது அவள் கைகளை பார்த்து நடந்தான் . மெலிடை அவள் இந்த சின்ன அவன் வருனீக்க தோனலை பதிலாக ரசித்து சிரித்தான் .இன்னும் அவளை ரசித்துகொண்டான் தான் நடந்து செல்கிறான் . ---தொடரும் --

எழுதியவர் : kavi Tamil Nishanth (25-Jan-16, 12:30 pm)
பார்வை : 272

மேலே