இப்படிக்கு, பெண்ணாய் பிறக்கவில்லையே என்று ஏங்கும் ஒரு பிறவி

இன்னும் இன்னும் ஆயிமாயிரம் நீயா நானா ? விவாதங்கள் வந்தாலும் சரி பெண் சுதந்திரம் என்பது பற்றி யாரும் சரியான முடிவுகள் எடுக்கப்போவதில்லை .எல்லா விவாதங்களுமே பெண் சுதந்திரம் ஆணிடம் சிறை பட்டுக்கிடப்பதாகவும்.பெண் சுதந்திரமும் அவள் ஆடை மற்றும் ஆபரணங்களிலும்,குவிந்து கிடப்பதாக பழைய பரண் மேல் கிடக்கும் விவாத குப்பைகளை தூசி தட்டுவதிலும் பப்புக்குப் போவதுவும் ,பியூட்டி சென்டரிலும்தான் பெண்களின் சுதந்திரதிற்கான அடையாள அட்டை கிடைக்கிறது என்பது மிகப்பெரிய விளம்பர உலகின் தந்திரம் .
வேதாத்ரி மகரிசி சொல்வது போல உலகில் பாதிப்பேர் பெண்கள் மற்ற மீதிப்பேர் அவர்கள் பெற்ற ஆண்கள் அவ்வளவே !
இந்த உலகின் முதல் பிறப்பே பெண்தான் இன்றும் அதிகம் பேசப்படும் சோழர் ஆட்சி கூட பெண்கள் அரசிய ஆளுமையை இன்றும் படிக்கிறோம் . ஆண்கள் தடைகள் என்று சொல்வது உண்மைதான் . ஆனால் அது அன்றைய பொருளாதாரம் சார்ந்து இருந்த போது பேசப்பட்ட பழைய பழ மொழிகள் .ஆண் தடை என பேசப்படுவது எனக்கு ‘டமில்’அவ்வளவாக வராது என்று தோள் குலுக்கிக் கொண்டு பேசுவது போல ஒரு ஃபேசனாக போய்விட்டது .
இன்றும் தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று பிடிவாதமாக பிரார்த்தனை செய்யும் பெண்களைப்பற்றி உங்கள் ஊர் அரசமரங்களையும் ஆளே கிடைக்காமல் அதன் அடியில் உட்கார்ந்து இருக்கும் இருக்கும் பிள்ளையாரயும் கேளுங்கள்.இன்றும் பெண்கள் உடைபற்றி ஆண்கள் பேசி சிலாகிப்பதை விடவும் பெண்களே பெண்களைப்பற்றி அவதூறு பேசுவதுதான் அதிகம் .ஆனால் இதெல்லாம் கற்பிக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் .உண்மை வேறு .மாறாத உண்மைகள் பற்றிய நம் அறிவின் குறைபாடுதான் நம் வளர்சிக்கு எங்கும் எப்போதும் தடை என்பது இருபாலருக்கும் பொது.
சிவம் என்பது ஆணல்ல. ஆனால் சக்தி என்பது பெண் . ஐந்தறிவு நிலையில் படைப்பின் விதிமுறைகள் தகர்க்கப்பட்டபோது முதல் செயல் வடிவம் அவளிடமே ஒப்படைக்கப் பட்டது .பெண் இந்த உலகில் உடல் நிலையில் மட்டுமல்ல மனோ ரீதியாகவும் ,மூளை அமைப்பிலும் இயற்கை தன்னைப்போல ஒரு படைப்பை நிகழ்த்தும் ஆற்றலை அவளுக்குள் படைத்து இருக்கிறது .அவள் தேர்வு செய்யும் இடத்தில்தான் ஆண் இருக்கிறான். பாலுணர்வு விசயத்தில் . பெண் தேடும் அவளின் பரிபூரண சுதந்திரம் ஆணிடம் இல்லை .ஒருவகை தாழ்வு மனபான்மையே ஆணை ஒரு அப்படி செயல்புரிய வைக்கிறது .பயம் .அவன் உடல் வலிமை தற்காப்புக்கும்,வேட்டையாடுவதற்கும் ,தன் கூட்டத்தை பிற கூட்டங்களிருந்து பாதுகாக்கவே . அதை அவன் பெண்கள் மேல் உபயோகிப்பது கையாலாகாததனம்தான் . இன்று ஆணின் வேலைமுறைகள் மாறிப்போனதால் மனசுக்குள்ளே வேட்டை மிருகங்களை துரத்துவது முற்றிலுமாக நின்று போகவில்லை .
.
மேலும் இன்னொருவரின் அறிவுரை அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பிறழ்வை நோக்கி நகர்த்தி விடுகிறது .புரியாமல் அவன் தேர்வு செய்யும் முதல் வேலை போதை ,வீரம் காட்டும் விளையாட்டு ,தன்னைவிட வலிமை குறைவு என்பதாக பெண்ணினத்தை சோதிப்பது ,விவாதங்கள் ,அரசியல்,போன்ற வலிமை சார்ந்த பகுதிக்குள் தன்னை நிலை நிறுத்த முயற்சிப்பதே அதன் விளைவு ஆண் உண்மையில் ஆபத்தை எதிர்கொண்டு காத்து இருக்கும் வேட்டை மனதை இன்னும் அவன் மூளை அமைப்பில் மாற்றிக்கொள்ளவே இல்லை .மாறும்.என்னிடம் சகல் திறமையும் இருக்கிறது எனக்கு ஆண் மட்டுமல்ல இந்த இயற்கை கூட தடை இல்லை . இந்த இயற்கையின் பின்ன நிலைதான் பெண் எனும் பிறப்பு என்பதை உணரும் இடத்தில் கைகூப்பி தொழும் இடத்தில்தான் பெண் இருக்கிறாள் .இருப்பாள் .

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (25-Jan-16, 2:25 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 658

சிறந்த கட்டுரைகள்

மேலே