தற்கொலை - ஆனந்தி

நன்றி : வாரமலர்
பழங்கால கிரேக்கர்கள் தக்க சூழ்நிலையில் தற்கொலை செய்துக்கொள்வதை மதிப்பிற்குரிய செயலாகக் கருதினர் எனப் படித்த போது, அதிர வைத்தது....அதே சமயம் நம்மூரில் தற்கொலை எவ்வளவு மலிவாகி விட்டது என்பதை, எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை....

மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும்ஏமாற்றங்களே தற்கொலைக்கான பின் புலன்கள்....
குடும்ப சண்டை, தேர்வில் தோல்வி, காதல் தோல்வி போன்றவை தற்கொலைக்கு முதல் காரணமாக முன் நிற்கின்றன....

பெரும்பாலும் ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாமல் போவதினாலே குடும்ப சண்டைகள் அரங்கேறி விடுகிறது...அதை தவிர்ப்பதற்கு, எதிரில் இருப்பவர்கள் பேச்சையும்,
காது கொடுத்து கேளுங்கள் ..அவர்களின் கருத்துக்களை ஆதரிக்க வேண்டும் என்று இல்லை...நாகரீகமாக மறுக்க கற்றுக்கொள்ளுங்கள் ...போதும்..

அடுத்து மதிப்பெண் குறைவு, தேர்வில் தோல்வி!....ஒரு தேர்வு முடிவு உங்களின் திறமையை சரியாக பிரதிபலித்திட முடியுமா..அவர்கள் யார்? உங்களின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்க...அடுத்த தேர்வில் தேறிவிடலாம்...அல்லது உங்களது திறமை என்ன...எதில் ஆர்வம் அதிகம்...என்று அனுமானித்து, கவனத்தை அதில் செலுத்துங்கள்...

மாணவர்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்...இங்கு சாதித்தவர்கள் அல்லது சாதித்துக்கொண்டு இருப்பவர்களில் பெரும்பான்மையினர்...தேர்வில் தோல்வி கண்டவர்களே...அடுத்து

காதல் தோல்வி,,,இவ்வார்த்தைகளின் பொருளை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமா..என்ன?...காதலுக்கு ஏது தோல்வி..நீங்கள் உங்கள் அன்புக்கு உரியவரை, நேசிப்பது, நேசித்து கொண்டிருப்பது அல்லது நேசிக்க போவது உண்மை தானே...அதே போன்று, சம்பந்த பட்டவரும், உங்களை நேசிப்பதோ அல்லது மறுப்பதோ அவர்களுடைய தனியுரிமை தானே ..இதில் தோல்வி எங்கிருந்து வந்தது...சற்றே யோசித்து பாருங்கள்!

சமீப காலமாய், கடனோ, வேறு காரணங்களுக்காகவோ, மிரட்டப்படுவோர் அதிலிருந்து மீள, தற்கொலை செய்து கொள்கின்றனர் அது தற்காலிக பிரச்னை தான் அதிலிருந்து மீள தற்கொலை தான் தீர்வா?..மனம் விட்டு பேச பழகுங்கள்...நண்பர்களிடமோ, குடும்ப உறுப்பினர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ...உங்களுக்கு யாரிடம் பேசினால் ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறீர்கள்....அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் ....

அந்த கணத்தில் மனம் கனமாய் தோன்றிவிடுகிறது...குறுகிய மனப்பான்மையோடு தான் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது... ..தற்கொலை எண்ணங்கள் தலைத்தூக்குகிறதா? பாடல் கேளுங்கள், 'தொலைக் காட்சிகளில்' நகைசுவை காட்சிகளை பாருங்கள்....அல்லது ...பிடித்த ஒன்றில் கவனத்தை செலுத்துங்கள்...மனம் ஒரு மந்திர சாவி....புரியாத புதிர்...முதலில் மன குளத்தை குழப்பி விடுங்கள்...அப்பொழுது தானே தெளிய இயலும்...மனம் குழந்தையை போன்றே நடத்தையுடையது...சற்றே அழுத்தி சொன்னால் ஏற்று கொள்ளக் கூடியது....

விபத்துகள் போலவே தான் தற்கொலைகளும்...யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தால்...முதலுதவியாய்...லாவகமாய் பேசி,,,தற்கொலையின் விளைவுகளை புரிய வைத்திடுங்கள்...போதும்....சில நாட்களுக்கு பிறகு...தற்கொலைக்கு முயன்றவர்களும் கூட சற்றே அவர்களை அவர்களே எண்ணி நகைத்திட கூடும்...ஏனெனில்,,, பிரச்சனைகளை அப்பொழுதுகளில் அவர்கள் கடந்திருப்பார்கள்...வாழ்வின் சூட்சுமங்கள் நாம் வாழ்வை எதிர்கொள்ளும் விதத்தில் தானே ஒளிந்திருக்கிறது...

உங்களை ..ஏளனப்படுத்திடவும்..சிரித்திடவும் ...உனக்கு நிகர் இங்கு எவர்?...என்னை விட உயர்ந்தவரும் இல்லை...தாழ்ந்தவரும் இல்லை...'என்னால் முடியாதென்றால் இங்கு எவராலும் முடியாது'...என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லி ..நம்பிக்கையோடு,,,வாழ்வை எதிர்கொள்ளுங்கள்... ....நாளை மட்டுமல்ல...இந்நொடியும் உங்களதே...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பின்லாந்து நாட்டில் தற்கொலை தடுப்பு மையங்களால்...தற்கொலைகள் அந்நாட்டில் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன...உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி ஆண்டொன்றுக்கு 20 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


-ஆனந்தி ராமகிருஷ்ணன்

எழுதியவர் : ஆனந்தி . ரா (25-Jan-16, 5:38 pm)
பார்வை : 197

மேலே