காலத்தினாலும் அழியாத காவிய காதல்
நான் இருக்கும் இடம் அழகிய பூங்கா...
அடிக்கடி குழந்தைகள் விளையாடி ரசிக்கும் அழகிய பூக்கள்(குழந்தைகள்) நிறைந்த சோலை
காதலர்கள் கொஞ்சி பேசி மகிழும் ஒரு காதல் நிலையம்....
இதில் நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட ஒரு இருட்டு அறையில் நான்...
அடிக்கடி வெயில் எப்போதாவது மழை.... இதுவே நான் தினம் தினம் காணும் காட்சி
இதுவே அவன் எனக்காக கட்டிய தாஜ்மஹால் தோட்டம்.....
அதோ!!! வருகிறான் என் காதலன் கையில் ஐந்து மாத தேவதையுடன்.
அருகில் அவன் மனைவி என்னை விட அவனை அதிகமாக நேசிப்பவள்
மற்றவர்கள் அவன் மகன்,மருமகள் என்னை காண வந்துள்ளனர்.
வருடத்தில் இரண்டுமுறை என்னை காண வந்துவிடுவான் குடும்பத்துடன்.
பலமுறை தனிமையில்
இன்று அந்த இரண்டு நாட்களும் இல்லை ஏன் வந்தார்கள் என்று புரியவில்லை கேட்கவும் தூணிவு இல்லை.
என்னை வணங்கிவிட்டு பேச ஆரம்பித்தான் மனதிற்க்குள்.
இவள்!!! நம் பேத்தி பெயர் தெரியுமா?
அவள் பெயர் மோனிஷா
என்ன எங்கோ கேள்வி பட்டது போல் உள்ளதா?
உன் பெயர்தான் என்கிறான் அதே !!வெகுளி தனத்துடன்.
எனது மனதிலும் ஏதோ மகிழ்ச்சி இருப்பினும் வெளிக்காட்டாமல்.
எங்கள் காதல் நினைவுகளை நெஞ்சில் எந்தி திரும்பி பார்க்கிறேன்... விழிகள் ஓர ஈரங்களுடன்.
அது ஒரு கல்லூரி சொர்க்கம்
என்னை துரத்தி துரத்த காதல் செய்தவர்கள் நிறைய பேர் இருந்தனர்.
என்னூடைய வாழ்நாள் முடிவு தெரிந்தும் என் மீது காதல் புரிந்தவன் அவன் அதனாலே அவன் மீது காதலில் விழுந்து விட்டேன் போல.
தனிமையில் பல நேரங்கள்
எல்லை மீறாத அந்த குணம்
என் தேகத்தை தீண்டாத அந்த விரல்கள்
இன்றும் என் கண்முன்னே...
சாகும் நாட்களை எண்ணி கொண்டு இருக்கும் உனக்கு இந்த காதல் தேவையா? என்று ஒரு அசரீரி
ஆழ்மனதில் புரிய மறுக்கிறது இதயம்
நான் உயிருடன் இருக்கும் போது அவனிடம் வாங்கிய சத்தியம்!!!
நான் போன பிறகு என் பின்னே நீ வந்து விடாதே!! என்று....
அவனுடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசைபட்டேன்
முன்பே புரிந்திருக்க வேண்டும் அது பேராசை என்று.
உண்மை காதலை மட்டும் ஏன் இந்த கடவுள் புதைத்து விடுகிறான் என்று இன்று வரை புரிய வில்லை.
அந்த கண்கள் ஆம்!!! அதே!!! கண்களின் ஈரம் பல முறை கண்டுள்ளேன் இருப்பினும் ஏனோ புதிதாய் பார்ப்பது போல் ஒரு உணர்வு
என் கண்களின் ஈரங்களுக்கு
இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளது. மீண்டும் அந்த கண்களை கண்டு விடுவேன்....
ஆம்!!!! அன்று தான் என் இறந்த நாள்...
தள்ளாடும் வயதிலும்
என் காதல் உயிருடன்...
என்று கர்வத்தில் என் கல்லறை...
அன்புடன்... சிவா....