தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து9---ப்ரியா

(முன்கதை சுருக்கம்:வசந்த் ரியா இருவரும் பெங்களூரில் நிர்வாகக்குழு கூட்டத்திற்காக தயாராகிக்கொண்டிருந்தனர்...கீது தோழிகள் யாருமின்றி தனியாக ஊருக்கு வந்துவிட்டாள்...)

இனி....

கீது அவளது உறவினர்களைப்பார்த்ததுமே நமது பெயரில் ஏதோ ஒரு விஷயம் நடக்க போகிறது அதற்கு தான் இந்த திட்டம் என்பதை புரிந்து கொண்டாள்.

என்னம்மா? பாட்டிக்கு உடம்பு சரி இல்லை உடனே வா என்று சொல்லிவிட்டு இப்டி வீடே திருவிழா மாதிரி களைகட்டி இருக்குது........ எதுக்கு பொய் சொல்லி வரவச்சீங்க என்று பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டு கேட்டாள்.......?யாரும் அவளுக்கு பதில் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாய்க்கொடுத்தனர்.......!

உன் தோழிகள் இரண்டு பேரும் எங்கே?என்று என்று ஒரு குரல்.

அவர்கள் வராதது அனைவருக்கும் கவலைதான் காரணம் தோழிகள் இல்லாமல் இவள் எந்த முடிவும் எடுக்கமாட்டாள் என்பது அவர்களுக்கே தெரியும்...,,,,உன்னை பெண்பார்க்க வருகிறார்கள் உண்மையை சொன்னால் நீ வரமாட்டா அதான் சொல்லவில்லை என்று அப்பா அவளை சமாதானப்படுத்தினார்........

அதுக்காக பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்றா சொல்லணும் என்று செல்லமாய் கோவப்பட்டாள்..!

சரிப்பா என் தோழிகள் இரண்டுபேருமே இந்த தடவை நம்ம ஊருக்கு வர முடியாத இக்கட்டான சூழலில் இருக்காங்க..ஆனால் திடீர்னு இப்டி திருமணம் என்று சொன்னால் எப்படி அப்பா முதலிலேயே சொல்லியிருந்தால் யாரவது ஒருத்தியையாவது கட்டாயப்படுத்து அழைத்து வந்திருப்பேன் என்று புலம்பிக்கொண்டிருந்தாள் கீது.......

சரி இனி பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை நான் என் தோழிகளிடம் பேசி அவர்களையும் எப்டியாவது வர சொல்கிறேன் என்று போனை எடுத்து வந்தனாவுக்கு கால்பண்ணினாள் அவள் போன் எடுக்கவில்லை..........ரியாவிடம் பேசினாள் அவளோ நைட் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு உடனே கட் பண்ணிவிட்டாள்,அவள் பிசியாக இருப்பது அவள் பேச்சிலேயே புரிந்தது கீதுவுக்கு.......!

வந்தனா அழைப்பை ஏற்றுக்கொள்ளாததால் அவளை திட்டிக்கொண்டே தனது பேக்கிலிருந்து துணிகளை எடுத்து கீழே வைத்துக்கொண்டிருந்தாள்.....வந்தனாவின் டைரியை தான் தெரியாமல் எடுத்து வந்ததை அப்பொழுதுதான் பார்த்தாள்..... அதை உள்ளே வைக்க நினைத்தவள் எதேச்சையாக அதை திறந்து பார்த்தாள்......அதில் இருந்த போட்டோவை பார்த்தாள்.

ஓ!இதுதான் உன் மன்மதனா?பார்க்க அழகாய் தான் இருக்கிறான்....என்று சொல்லிவிட்டு போட்டோவை மறுபடியும் பார்த்தவள் இவனை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதே எங்கு?? என்று யோசித்தாள் பிடிபடவில்லை...!

இன்னும் மனதிற்குள் ஒன்று தோன்றியது வசந்தின் போட்டோவை காமிச்சிதான்னு கேட்டதுக்கு, இல்லை எல்லாத்தையும் எரிச்சிட்டேன்னு பொய் சொல்லிட்டு இப்போதும் இதை இவ்வளவு பத்திரமாய் வைத்திருக்கிறாள் என்றால் கண்டிப்பா இவ மனதிலிருந்து அவனை வெளியேற்ற இயலாது??????வந்தனா இன்னும் வசந்தை மனதார காதலித்துக்கொண்டுதான் இருக்கிறாள்.

ரியா வந்ததும் அவளிடம் எல்லா விஷயத்தை சொல்லி இருவரையும் அழைத்து சேர்ந்து உட்கார வைத்து பேச வைத்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்ற நிம்மதிப்பெருமூச்சுடன் அந்த போட்டோவை பத்திரமாய் வைத்தாள் கீது....!
_________________________________________________________________________________________________________________________________________________
வசந்த் மற்றும் ரியா மீட்டிங் நடப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்த வசதியான தனி அறையில் போய் அமர்ந்தனர்.....

இன்னும் பலர் இவர்களுக்கு முன்னரே வந்திருந்தனர்,சிலர் இன்னும் வராமலும் இருந்தனர்.

தன் வடிவமைப்பு மற்றும் அதன் நுட்பங்கள் செயல்பாடுகள் பற்றிய தகவல்களையும் சிறு குறிப்புகளையும் பென்டிரைவில் copy பண்ணி அதை ரியாவிடம் கொடுத்து வைத்திருந்தான்....

அவன் மிகவும் அமைதியற்று நிதானமில்லாமல் இருப்பதை பார்த்த ரியா, ரிலேக்ஸ் சார் என்று அவனது கையை பிடித்து ஆறுதல் படுத்தினாள்.....!

வெள்ளைப்பனித்துளிகள் மெல்ல தவழ்ந்து கையில் விளையாடுவதைப்போலும், குளிர்ச்சி மின்னல் மிதமாய் தாக்கியது போன்ற உணர்வும் ஏற்பட்டது....இருவருக்குமே......

என்ன மாயமோ?மந்திரமோ?தெரியவில்லை அவனது மனபயம் விலகி நிதானமாய் இருந்தான்.

என்ன ஒரு ஆச்சர்யம்......அவளை ஒருமுறைபார்த்து புன்னகைத்தான்.

சிறிது நேரத்தில் அனைவரும் வந்து சேர தொடங்கியதும் அனைவரையும் பார்த்தான் விதவிதமான முகங்கள்.

இவனையும் சேர்த்து சுமார் 30 நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தன,சற்று திகைத்துத்தான் போனான் வசந்த்.....சரி பார்ப்போம் என்று தன் குறிப்பை ரியாவிடமிருந்து வாங்கிக்கொண்டான்.

முதலில் வெளிநாட்டுத்தலைவர் பேச தொடங்கினார்.தங்கள் நிறுவனத்தையும் பல கிளைகளையும் பற்றித்தெளிவாய் சொன்னார்,ஏனைய நிறுவனங்களையும் சாதனைகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவர்களையும் மேடையில் அழைத்து வரவேற்றனர்.

ஒவ்வொருவராக அவரவர் வடிவமைப்பை திரையில் போட்டு அதன் செயல்திறன் நுட்பம் மற்றும் அதனைப்பற்றிய அனைத்து தகவல்களையும் அனைவருக்கும் புரியும்படி விளக்கப்படுத்திக்கொண்டிருந்தனர்.........!

அங்கு காட்டப்பட்ட அனைத்தும் புதுப்புது மாடல்களாக இருந்தன ஒவ்வொன்றும் ஒருவித அழகு..!

வசந்த் நிறுவனத்தலைவர் வசந்த் என்று அழைக்க......வசந்த் ரியாவின் கையைப்பற்றிதடவி தன் பயத்தை போக்கிக்கொண்டு மேடைக்கு சென்றான்.

திரையில் இவனது டிசைனை பார்த்த அனைவருமே வியப்புற்றனர் அவ்வளவு அழகு, இதன் வடிவமைப்பு முறை வசந்துக்கு மட்டுமே தெரியும்,இதை அவனால் மட்டும்தான் விளக்கமுடியும் அவ்வளவு நுணுக்கமான நுண்ணிய படைப்பு என்றே கூறலாம்.......

அதன் வடிவமைப்பு,செயல்பாடு,செயல்திறன் என அனைத்தையும் தெளிவாய் சரளமான ஆங்கில மொழியில் பேசி புரியவைத்துக்கொண்டிருந்தான்......

கம்பெனிக்கு வந்தபோது இவளிடம் முதலில் கண்பித்ததை விடவும் இந்த வடிவமைப்பில் இன்னும் நிறைய மாறுதல்கள் செய்திருக்கிறான் என்பது திரையைப்பார்த்ததுமே ரியாவால் புரிய முடிந்தது.

அவனது சரளமான ஆங்கில பேச்சுத்திறமும் அதற்கான விளக்கங்களும் உண்மைலேயே நிதானமாய் இருப்பதை உணர்ந்தாள்.

அனைத்தும் சொல்லி முடித்து அனைவருக்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு கீழே வந்து உட்கார்ந்தான் வசந்த்.

அனைவரது பார்வையும் அவன் மீதும் அவனது படைப்பு மீதும் படுவதை அவன் உணர்ந்தான்.

ரியாக்கைக்குலுக்கினாள் இதுவரைப்பார்த்ததில் உங்களது படைப்புதான் சிறப்பானது கண்டிப்பா நீங்க செலெக்ட் தான் என்று புகழ்ந்து வாழ்த்தினாள். அவள் வாழ்த்தியதில் அவன் இன்னும் பரவசமானான்......!

இன்னும் சிலரது படைப்புகள் பார்க்கப்பட்டது இறுதியில் மேலைநாட்டுதலைவர்கள் தனியாக கலந்தாலோசித்து முடிவை வெளிப்படுத்தினர்.

அதில் அனைவரும் எதிர்பார்த்தபடி வசந்தின் படைப்புதான் முன்னுக்கு வந்தது வசந்த் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் நின்றான் பரவசத்தில் ரியாவை கட்டிக்கொண்டான்.....அவனுக்கு இந்த அணைப்புகள் எல்லாம் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் முதன்முதலில் ஒரு ஆண் தன்னை அணைத்துக்கொண்டதில் அவளுக்கு ஏதோ போல் இருந்தது.....

அவனை மேடைக்கு அழைத்து வாழ்த்து சொல்லி அடுத்த வாரம் வந்து அக்ரீமென்ட்ல கையெழுத்திட்டு அனைத்து தகவல்களையும் ரைட் பண்ணி கொண்டு வாருங்கள்.......தங்கள் படைப்போ?இதன் தகவல்களோ? ரகசியங்களோ பிற நிறுவனங்களுக்கு தெரியவேண்டாம்,பிறகு அதை வைத்தே டூப்ளிக்கேட் தயாரித்துவிடுவார்கள்......அப்புறம் உங்கள் நிறுவனத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லாதது போல் ஆயிடும் ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த வாரம் என்னிடம் முழுதகவல்களையும் குறிப்பு பேப்பர்களையும் தங்கள் பெயரில் கொண்டு வந்து என்கையில் ஒப்படைக்கும் வரை கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்று அறிவுரைக்கூறினார்.......!

உங்களுக்கு உதவியாக வேறு யாரேனும் இந்த வடிவமைப்பில் உண்டா?என்று துணைத்தலைவர் கேட்க?

இல்லை சார் இது முழுக்க முழுக்க என முழு முயற்சியால் வடிவமைக்கப்பட்டதுதான் என்று சொன்னான்...!

மறுபடியும் அவனை வாழ்த்திவிட்டு தலைவர் மேடையில் இன்னும் அவனை புகழ்ந்தார்...

இவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான்,ஆனால் ரியா மட்டும் கவலையுடன் காணப்பட்டாள்,

தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவள் அவனது இந்த மகிழ்ச்சி நிரந்தரமில்லை இன்னும் கொஞ்ச நாட்களில் சிதறிவிடும் அதற்கு காரணமாய் நானிருப்பேனே?????என்ன செய்வது என்ற கவலையில் இருந்தவளை பின்னாலிருந்து வந்த வசந்த் அவள் கண்களை கைகளால் மூடினான்.......உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்போறேன் என்றவனின் கைகளில் அவளது கண்களில் இருந்து ததும்பிய கண்ணீர்த்துளிகள் அவனது கைகளை ஈரப்படுத்தியது...........




தொடரும்........!

எழுதியவர் : ப்ரியா (27-Jan-16, 11:01 am)
பார்வை : 198

மேலே