கல்லூரி வாழ்க்கை

அன்று
ஐந்து நாள்
தந்தையின் உழைப்பில்
ஐன்னூரை தாறுமாறாய்
செலவு செய்தவன்
கல்லூரி வாயிலில் நீ
காதலியாய் காத்திருந்தபோது......

இன்று
ஒரு நாள்
உழைப்பில் பலநாள்
செல்கிறது பல்லைக்கடித்தவாறே
இல்லத்தின் வாயிலில் நீ
மனைவியாய் காத்திருக்கும்போது......

அன்று நீயும் நானும்
உயிருக்கு உயிராய் காதலித்த
கல்லூரி வாழ்க்கையில் ஏனோ
இன்று நம் வாரிசு அரை வயிற்று
உனவோடு உறங்குகிறது இவர்கள்
காதலித்தது உண்மைதானா என்று ?.......

***************தஞ்சை குணா*****************

எழுதியவர் : மு. குணசேகரன் (27-Jan-16, 3:53 pm)
Tanglish : kalluuri vaazhkkai
பார்வை : 4099

மேலே