வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை
இரண்டு வருடங்களாக
உயிருக்கு உயிராய் காதலித்தோம்...
கவிதை வடித்தோம்...
நீயில்லை என்றால்
வாழவே தனிமை என்றோம்...
என் ஊனும் உயிரும் நீதானே என்றோம்...
உன்னை சிறையெடுக்க வானையே
துண்டாய் உடைப்பேன் என்றோம்...
இரண்டு குழந்தைகள் போதுமென்றோம்...
உன்னைப்போல் ஒன்று
என்னைப்போல் ஒன்று
வேண்டும் என்றோம்...
பெயர்கூட தேர்ந்தெடுத்து வைத்தோம்...
அவர்களுக்கும்
காதல் திருமணம் தான் என்றோம்...
ஆனால் இப்படியெல்லாம் தந்துவிட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
