நிழலாகவும் நிஜமாகவும் நீ எனக்குள் 555

அன்பே...
தினம் தினம் நான் எத்தனையோ
பெண்களை கடந்து செல்கிறேன்...
ஆயிரம் பெண்கள்
ஊருக்குள் இருக்கும்போது...
உன்னை எனக்குள் நினைக்க
வைத்தது யார் தவறு...
மாலை நேர தென்றல் வீசும் வேலை
உன்னிடம் என் காதலை சொன்னேன்...
இருள் தொடரும் நேரம் என்பதால்
என் காதலுக்கும் இருள்தானோ...
நீயோ இருமனதாக சொன்னாய்
உன் பதிலை...
காதல் கொண்டு உன்னோடு
சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன்...
முடியவில்லை என்றாலும்
நான் நினைத்து பார்க்க...
எனக்கும் ஒரு காதல் கிடைத்தது
சந்தோசம்தாணடி எனக்கு...
நீ என்னோடு இருந்தாலும்
இல்லாவிட்டாலும் சந்தோசம்தானடி...
எனக்குள் நிழலாகவும்
நிஜமாகவும் நீ இருப்பதால்.....