தனிமையிலே

தனிமையிலே...தனிமையிலே..
ஒரு நாள் காலை தனிமையிலே..

சூரியன் என் முகம் காண வந்தான்..
என் தனிமையின் காரணம் அறியவந்தான்.
நானும் சொன்னேன் அவனிடத்தில்..
உன்னிடம் சொல்ல மறந்ததையே..

அச்சம்..அச்சம்..என்னுள்ளே..
அதனால் இழந்தேன் உனைப் பெண்ணே!
காரணம் ஒன்றும் சொல்லாமல்,
ஏனடி நானும் உனைப்பிரின்தேன்?

என் இதயம் திறக்க தெரியலையே..
உனையும் மறக்க முடியலையே!!
நீயும் விலகிச் சென்றதுமே,
என் வாழ்வே வெறுமை ஆனதுவே!

என்னால் எத்தனை நாட்கள் நீ அழுதாய்!!
ஐயோ !! பாவி நான் தானே!!

வேண்டும், வேண்டாம், ஒன்று சொல்ல..
இத்தனை நாட்கள் ஆனதுவோ?
எத்தனை மாற்றம் என்மனதில்,
பதிலொன்று சொல்லத் தெரியாமல்!

தவறென்று நீயொன்றும் செய்யவில்லை.
என்னிடம் காதல் கொண்டதைத்தவிர!!

முதல் முறை நீ தந்த முத்தம்..
அதை விளக்க..
தமிழில் சொல்தேடி அலைந்தேன்..

பின்பு தான் புரிந்தது...
சில உணர்வுகள்..
சொற்களுக்கு அப்பார்ப் பட்டது என்று!!

இத்தனை நினைவுகள் கொடுத்த உன்னை..
இந்து இழந்து தவிக்கிறேன் தனிமையிலே!!!

எழுதியவர் : நேதாஜி (27-Jan-16, 9:53 pm)
Tanglish : thanimaiyile
பார்வை : 968

மேலே