என் விழிகளுக்கு
என் விழிகளுக்கு !
அழகான ரோஜா
மலர்கள் மட்டுமே
தெரிந்தன!
முட்கள் ஏனோ
புலப்படவில்லை !
என் விழிகளுக்கு
மரக்கிளை உச்சியில்
தேன்கூடு மட்டுமே
தெரிந்தன!
கொட்டும் தேனீக்கள்
ஏனோ தெரியவில்லை
என் விழிகளுக்கு !
சித்திரை திங்களில்
சுட்டெரிக்கும் மணற்பரப்பில்…
கடலலைகள் மட்டுமே
தெரிந்தன
மணற்பரப்பு ஏனோ
எனை சுடவில்லை !
கொட்டித் தீர்த்த
கணமழையில்
எல்லா இடத்திலும்
வெள்ளமாய் சூழ்ந்திருக்க
வெள்ளத்தின் ஆழத்தை
கால்கள் ஏனோ காணவில்லை!
இத்தனையும்… இடையூறாய்
மற்றவர்களுக்கு தெரிந்தது
எனக்கு மட்டும்
இடையூறாய் இல்லாதது
இனிய காதலி……….!
என்னுடன் இருந்ததாலே !
----- கே. அசோகன்.

