மதயானை - லிமரைக்கூ

சொல்ல நினைத்தது நெஞ்சம்
சொல்லினிடையில் தாவும் மனம்
மெல்ல இழந்தது கொஞ்சம்

இயல்பில் உந்தன் சகவாசம்
நாளும் நாளும் கொள்ள – நான்
உன்நினைவில் கொண்டேன் சிறைவாசம்

உன்னைக்காண நெஞ்சில் பரவசம்
தெரிந்தும் மறைந்து நீயெனை
காணா செய்யும் பரிகாசம்

புத்தம்புதிய நிலவின் பிரகாசம்
சுட்டு விழுந்தும் தட்டிஎழும்
மனதிற்கு வேண்டும் சமரசம்

கண்டும்காணா நீசெய்யும் வேசம்
காணாகண்டும் உன்னால் நித்தம்
வளர்ந்தது காதல் விருட்சம்

தென்றலுடன் தழுவும் உன்வாசம்
நெஞ்சம் கொள்ளக் துடிக்கும்
என்றும் உந்தன் பரிசம்

உன்னைக் காணாதில்லை நான் என்வசம்
மெல்ல எழுமென் காதல் மதயானை
உந்தன் பார்வையே அடக்கும் அங்குசம்

- செல்வா

பி.கு: - லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதையில் முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபுத் தொடையுடன் அமையும் குறும்பா ஆகும்[1]. ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக் வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது.

எழுதியவர் : செல்வா (28-Jan-16, 1:14 am)
சேர்த்தது : செல்வா
பார்வை : 125

மேலே