சொர்க்கம் காட்டிய ஒரு துளி

முன்னங்காலும் பின்னங்காலும் போட்டியிட
வேகாத வெயிலில்
மிதிவண்டியில் பயணிக்கும்......
தோல் சுருங்கிய கிழவன் நான்...
இறைவா....
இந்த வெயிலுக்கு கிணற்றிலேயே
விழுந்து கிடக்கனும் போல் உள்ளது...
நெற்றி வியர்வை
மூக்கு நுனியில் நின்று கொண்டு
கீழ குதிக்கலாமா வேண்டாமா
என்ற தயக்கத்தில்....
பட்டென ஒரு மழைத்துளி
அவனை(வியர்வைத்துளி)
தரைக்கு இழுத்து சென்றது....
எனக்கு சொர்க்கத்தை காட்டியது....

எழுதியவர் : மா.யுவராஜ் (28-Jan-16, 4:21 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
பார்வை : 123

மேலே