கரையோரம்
மனிதனுக்கும் ,,மழைக்கும் நடக்கும் ஒரு உரையாடல்
என்ன ஆட்சி
நீ பண்ண காரியத்துல
என்ன என்ன ஆட்சி
தெரியுமா....
இரவு நேரத்துல
மணக்கோலம் கொண்டுயிருப்ப
உன்ன இழுத்துனு ஒடலானு தோனும்
பகல் நேரத்துல விதவ
கோலம் கொண்டாலும்
ரசிக்க தோனும்
கரும் துணியில பந்தல் போட்டு அழுதயே
எவனோட எழவுக்கு அழுத.....?
எமனோட எழவுக்கா அழுத....?
நிறுத்து மனிதா
கொஞ்ச நேரம்
உன் செவி திற
கேள்வியை மட்டும் உள் வாங்கு
நா பட்டா வாங்கிய
எடத்துல கொட்டா போட்டது
யார் தவறு.....?
பிளாஸ்டிக் கூலி படையை ஏவி
என் வழி மறைத்தது
யார் தவறு....?
நீயும் நானும் ஒன்று
நீ மாறினால் நானும் மாறுவேன்
உன் மாற்றமே
என் தோற்றம்