பெற்றவரின் கவலைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
பெற்றவர்களின் கவலைகள்!
மண்ணில் விழுந்த நேரத்திலே
-------மாதாவுக்கு என்மேல் கவலை!
கண்ணாய் கருத்தாய் வளர்ப்பதில்
-------கோடானு கோடி கவலைகள்!!
உண்ணும் போதும் அன்னைக்கு
-------ஓராயிரம் கவலைகள் தான்!
அன்னை கவலைக்கு நான்
---------அரும் மருந்தாவது எக்காலம்!
பள்ளியில் சேர்ப்பதற்கே தேவை
---------பணமென்ற கவலை தந்தைக்கு
துள்ளிஓடுகையில் எங்கே கால்
---------தடுக்கி விழுவேனோ கவலை!
நல்நண்பன் நாலுபேர் வேண்டுமே
---------நியாய கவலைகள் தந்தைக்கு
நியாய கவலைக்கு தான்
---------தீர்வுகள் தருவது எக்காலம் !
வாலிபத்தின் வாசலின் போதே
---------வந்திடுமோ காதலென்ற கவலை!
வேலிதாண்டி போயிடு வானோ
---------வீண்கவலை தானே தந்தைக்கு
தாலிகேட்டு அடம் பிடிக்கும்
---------தவிப்பான கவலை காதலிக்கு
தாலி கேட்ட காதலியின்
---------துயர்துடைப்பது எக்காலமோ?
ஆளுக்கொரு கவலை தான்
---------அவரவர் கவலைகள் என்னை
ஆலாய் படுத்தவே என்னை
---------அண்டித் தான் வந்தனவே
பெருங் கவலைகளாய் பொங்கியது
---------சுண்டிவிட்டேன் கவலை யெலாம்
சுதந்திரமாய் சுற்றித் தானே
------- செல்லமாய் வளர் கின்றேனே!
----- கே. அசோகன்.