ஏமாற்றங்கள் - ஏழைகளுக்கு மட்டும் - கற்குவேல் பா
மாருதி கார் வேண்டி ஏங்கியவனுக்கு ,
பென்ஸ் கார் தந்து மகிழும் கடவுள் ;
உணவு வேண்டி கையேந்தியவனுக்கு,
தண்ணீர்கூட தர மறுக்கிறார் !
* *
மூன்றுமாடி வீடு வேண்டி நின்றவனுக்கு ,
லக்ஷ்சூரி வில்லா தந்து மகிழும் கடவுள் ;
கால்வாய் கரையோரம் கூரையிட்டவனுக்கு ,
வெள்ளம் தந்து வேடிக்கை பார்க்கிறார் !
* *
பீட்டர் இன்லண்ட் சட்டை கேட்டவனுக்கு ,
ரேமண்ட கோர்ட் அணிவித்து மகிழும் கடவுள் ;
தீபாவளி உடைவேண்டி அழும் ஏழைக் குழந்தைக்கு ,
பிறர் உடுத்திய துணிகளைக்கூட தர மறுக்கிறார் !
* *
இருப்போருக்கு ,தேவைக்கதிக செல்வங்களை ,
தந்தவாறே வாழும் கடவுள் ;
இல்லாதோருக்கு , அடிப்படைத் தேவைகளைக்கூட
தர மறுக்கிறார் , தான் இல்லை என்கிறார் !
~ பா .கற்குவேல்