தங்கம்மே உன்னத்தா தேடி வந்தே நானே

(தங்கம்மே உன்னத்தா தேடி வந்தே நானே ...மெட்டு)

பெண்ணே நா உன்னால மண்ணோடா மாறிப் போறே
என்ன நீ ஒடச்சுத்தா சிலாட்டம் ஆடிப்போற

சொல்லால சுட்டுப்புட்ட நீயே
துளி கூட வெறுக்கல தாயே
உன்னால இருக்கையில் நானே
பறக்குறேன் பறக்குறேன் பறக்குறேன் மானே

விண்வெளியும் வயலென போச்சு
மீனெல்லாம் விதையென ஆச்சு
என்னநானே உனக்குள்ள புதச்சு
முளச்சே முளச்சே முளச்சே வெடிச்சு

நீ நடந்த தடமும் கூட தனியா
தானே தெரியுமே
பூமணமும் காற்றில் மறஞ்சு உந்தன்
வாசம் அலையுமே

என் மனசு உனையேத் தேடி
உன் உசுரு எனக்குள்ள ஓடி
உன்ன மட்டும் எப்பவும் பாடி
திரியும் திரியும் திரியும் ஆடி

ஓ....உன் நகையில் எந்தன் உயிரோ
ஒருகோடி ஆகுதடி
நெல்நிறைந்த பயிரின் குழையாய்
என்னுயிரும் சாயுதடி

எழிலே எந்தன் எல்லாம் நீயெனவே நின்றாயே
உன்னை உள்ளம் கொண்டே இன்பம் கண்டேனே

எந்தன் இருள் துன்பம் அது நீங்கி விட
ஒளிகொண்டு வந்த என் வெண்ணிலவே

விண்தேடி நான் பார்த்து வைத்த
என் உயிரே நீதானடி

பெண்ணே நா உன்னால மண்ணோடா மாறிப் போறே
என்ன நீ ஒடச்சுத்தா சிலாட்டம் ஆடிப்போற

என் மனசு உனையேத் தேடி
உன் உசுரு எனக்குள்ள ஓடி
உன்ன மட்டும் எப்பவும் பாடி
திரியும் திரியும் திரியும் ஆடி

விண்வெளியும் வயலென போச்சு
மீனெல்லாம் விதையென ஆச்சு
என்னநானே உனக்குள்ள விதச்சு
முளச்சே முளச்சே முளச்சே வெடிச்சு

நீ நடந்த தடமும் கூட தனியா
தானே தெரியுமே
பூமணமும் காற்றில் மறஞ்சு உந்தன்
வாசம் அலையுமே

என் மனசு உனையேத் தேடி
உன் உசுரு எனக்குள்ள ஓடி
உன்ன மட்டும் எப்பவும் பாடி
திரியும் திரியும் திரியும் ஆடி.

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன் ) (29-Jan-16, 12:04 pm)
Tanglish : penne naa unnala
பார்வை : 106

மேலே