வேண்டுகோள்

பாட்டன் பாரதி கேட்டிட்ட
காணி நிலம் கயிற்று கட்டில்
தென்னை மரம் தென்றல் காற்று
கால் நனைக்க வாய்க்கால்
எல்லாம் உண்டு வீட்டில் .....
நான் தான் அங்கு இல்லை

வசந்தத்திற்கும் வாசத்திற்குமாக
வாடைக்கும் கோடைக்குமாக
மல்லி சாமந்தி கனகாம்பரம்
செம்பருத்தி ரோஜாவால்
நிறைந்திருக்கும் தோட்டம் உண்டு
என்னால்தான் துய்க்க முடியவில்லை

பேசும் கிளி துள்ளும் முயல்
வாலாட்டி கட்டித்தழுவும் நாய்
தத்தும் வாத்து என தேடி
வாங்குகிறேன் செல்லபிராணிகளை
ஆனால் செல்லம் என்னோடு
பிராணிகளோ வீட்டோடு

கையில் இரண்டு பையோடு
மாத கட்டண இருப்போடு
படிப்புக்கென வெளியேறி
வருடம் பல-ஆனால்
இன்னும் வீடு திரும்பவில்லை
அந்நாளுக்காக காத்திருக்கிறேன்

அதுவரையில் தண்ணீருக்கான
மூன்றாம் உலகப்போரை ஒத்திப்போடுங்கள்
மண்ணில் பச்சை வாழட்டும்
என் மகளுக்கோ மகனுக்கோ
எனக்கு வாய்த்த குழந்தை பருவத்தை
காட்டி விட்டு போகிறேன்......

-டயானா

எழுதியவர் : மேரி டயானா (29-Jan-16, 11:39 am)
Tanglish : ventukol
பார்வை : 136

மேலே