பெண் குழந்தை
உலகத்தை கண் திறந்து
பார்க்கப் போகும்
சந்தோஷமும்......
இந்த உலகில் தாம்
எவ்வளவு துயரம்
அடையப் போகிறோமோ
என்ற வருத்தமும்.....
ஒரு சேர கலந்து
கண்ணீர் துளிகளை
கண்களில் வழியவிட்டு
சிரிப்பை
உதட்டில் தவழ விட்டு
பிறக்கும்
முதற் பெண் குழந்தை.....
ஆசையாய் பசியைப் போக்க
பால் தர வேண்டியவள்
வேண்டா வெறுப்பாய் எண்ணி
கள்ளிப் பால் விட்டு
அந்த சிசு
வளரும் முன் முளையிலேயே
கிள்ளி எறிகின்றாள்
அவளும் ஒரு பெண் தானா....?