காதல் சொல்ல வந்தேன்

காதல் சொல்ல வந்தேன் என் காதல் வெல்ல வந்தேன்
மெல்ல மெல்ல வந்தேன் உன்னருகே என் காதல் சொல்ல வந்தேன்

உன் பார்வை எனைக் கொல்ல கொல்ல
நான் நெருங்கி வந்தேன் என் காதல் சொல்ல சொல்ல
நீ விலகிச் செல்ல செல்ல
உன் நாணம் எனைக் கொல்ல கொல்ல
நான் நானாக வந்தேன் என் காதல் சொல்ல சொல்ல

உன் புன்னகை எனைக் கயிறுகட்டி இழுக்க இழுக்க
நான் சரிந்து விழுந்தேன் என் காதல் சொல்ல சொல்ல

உன் இதழ்களில் தேன் சொட்ட சொட்ட
நான் இனிப்பு மழையில்
நனைந்து வந்தேன் என் காதல் சொல்ல சொல்ல

உன் கன்னக்குழியில் தொலைய தொலைய
நான் தவழ்ந்து வந்தேன் என் காதல் சொல்ல சொல்ல

உன் கண்ணிமை எனை அழைக்க அழைக்க
நான் கண்ணிமையாய் வந்தேன் என் காதல் சொல்ல சொல்ல

உன் கண்களோ அன்புக் காதல் பேச பேச
என் நெஞ்சமோ கொஞ்சும் காதல் சொல்ல சொல்ல

காதல் சொல்ல வந்தேன் என் காதல் வெல்ல வந்தேன்
மெல்ல மெல்ல வந்தேன் உன்னருகே என் காதல் சொல்ல வந்தேன்

எழுதியவர் : எழில் குமரன் (31-Jan-16, 6:12 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 324

மேலே