புரட்சிக் கொடி வெண்பா
கவிப்பிரிய மதிபாலன் அழகான ஒரு யாப்பு சார்ந்த கேள்வியை கேட்டிருந்தார்
முந்தைய பதிவான புரசிக் கொடி செம்பா வில் ,,
இதோ அவள் பல விகற்ப ப ஃ றொடை வெண்பாவாக
பூமியில் சேகுவாரா வின்உரிமை செம்புரட்சி
பூவிதழில் அன்பேயுன் புன்னகை இன்புரட்சி
பூமிசிவக் கும்சேயின் செம்புரட்சி தன்னிலே
பூவிதழ் கள்சிவக்கும் உன்புரட்சி புன்னகையில்
எப்புரட்சிக் குக்கொடி நான்பிடித்துச் செல்வேன்
புரட்சிக் கொடிநீயே சொல்
---கவின் சாரலன்
ஆதலினால் அவள் செம்பா இவள் வெண்பா