அண்ட்ராய்ட் நினைவுகள்

அந்த நிமிடங்கள்
மறக்க முடியாதவை ...!!
காலம் கடந்தாலும்
நொடிகளுக்குள் வந்துவிடும் நம் காதலே ...!!!

நீ தொலைந்த போதும்
தொலைவில் இருந்த போதும்
நம் எண்ணங்கள் மட்டும் வெகு தொலைவில் இல்லை
தொலை பேசி நம்மிடமே...!!!

தலையணை இரண்டு
தலை ஒன்று இங்கு
பூ அங்கு
ஒற்றை ரூபாய் நாணயம் போல்
சில்லறையாய் சிதறுகிறேன்
தலையணை மேல் கோபம் கொண்டே ..!!!


காதல் கசந்தாலும்
மனம் கசிந்தாலும்
நீ என்னை அணைத்து கொள்வாய்
உன்னை நான் அணிந்து கொள்வேன்
இப்போது வெறும் பத்து விரல்கள் மட்டுமே ..!!


அந்த நிமிடங்கள்
மறக்க முடியாதவை ...!!
காலம் கடந்தாலும்
நொடிகளுக்குள் வந்துவிடும் நம் காதலே ...!!!

எழுதியவர் : அருண்வாலி (31-Jan-16, 2:58 pm)
பார்வை : 88

மேலே