புரட்சிக் கொடி செம்பா ---சங்கரன் அய்யா கவிதையின் வெண்பா வடிவம்
புரட்சிக் கொடி செம்பா --சங்கரன் அய்யா கவிதையின் வெண்பா வடிவம்
செவ்வுரி மைப்புரட்சி சேகுவேரா செய்திட்டான் !
செவ்விதழ்ப் புன்னகையால் செய்தாய் நீ தேன்புரட்சி !
சேயின் புரட்சி சிவப்பாக்கும் பூமியினை !
வாயைச் சிவப்பாக்கும் புன்னகைப்பு ரட்சி
இரண்டில் எதற்குக் கொடிநான் பிடிப்பேன் ?
புரட்சிக் கொடிநீ புகல் !
---மதிபாலன்
-குறிப்பு :சங்கரன் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டது.