இன்பக் கனா ஒன்று கண்டேன் - ராகமாலிகை
கல்கத்தா கு.சா.கிருஷ்ணமூர்த்தி (டிசம்பர் 1921 – மே, 16, 1999) என்ற இசைமேதை ஜி.என்.பி யின் தந்தை நாராயணசாமி ஐயரிடமும், டைகர் வரதாச்சாரியிடமும் இசை கற்றவர். இவர் சாகித்ய கர்த்தாவும், இசை ஆசிரியரும் கூட. இவர் இயற்றிய ‘இன்பக் கனாவொன்று கண்டேன்’ ஒரு பிரபலமான பாடல்.
இப்பாடலை ராகமாலிகையாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் கணீரென்ற குரலில் மிக அருமையாகப் பாடியிருக்கிறார். ஒவ்வொரு சொல்லும், உச்சரிப்பும் அருமை. தண்டபாணி தேசிகர்/மியூசிக் என்ற தளத்தில் கேட்கலாம்.
பல்லவி: சுத்த தன்யாசி
இன்பக் கனா ஒன்று கண்டேன்
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்
அனுபல்லவி:
தென்பழனி ஊரன் சேவற்கொடிக்காரன்
தென்பழனி ஊரன் சேவற்கொடிக்காரன்
என்னுயிர்க் காதாரன் இரவில் எனையணைய
என்னுயிர்க் காதாரன் இரவில் எனையணைய
இன்பக் கனா ஒன்று கண்டேன்
சரணம் 1 - சாருகேசி
பன்னிரு தோளழகும் பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் மேனியழகும்
பன்னிரு தோளழகும் பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் மேனியழகும் காதல்
கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும்
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்
சரணம் 2 - மலயமாருதம்
தென்றல் மலர் மணத்தை வாரியிறைத்தெங்கும்
திங்கள் அறிந்ததெந்தன் தேகம் சிலிர்த்தது அங்கு
தென்றல் மலர் மணத்தை வாரியிறைத்தெங்கும்
திங்கள் அறிந்ததெந்தன் தேகம் சிலிர்த்தது –அங்கு
அன்றிற் பேடோடு நடம் ஆடிக்களித்த போது
அன்றிற் பேடோடு நடம் ஆடிக்களித்த போது
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்
இன்பக் கனா ஒன்று கண்டேன்
சரணம் 3 - சிவரஞ்சனி
முன்னர் யான் கண்டறியா மோகக் கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் எனை மறந்தேன்
முன்னர் யான் கண்டறியா மோகக் கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் எனை மறந்தேன்
உன்னைக் கைவிடேன் என்றோர் உறுதிமொழியும் தந்தான்
உன்னைக் கைவிடேன் என்றோர் உறுதிமொழியும் தந்தான்
ஒப்பிவிட்டேன் நானினி தப்பிதம் ஏதுமுண்டோ?
ஒப்பிவிட்டேன் நானினி தப்பிதம் ஏதுமுண்டோ?
இன்பக் கனா ஒன்று கண்டேன்
சரணம் 4 - சாரங்கா
அன்புடன் பேசி என்னை அணைத்துப் பிடித்து இழுத்தான்
அதரம் கனிய முத்தம் அமுதமெனக் கொடுத்தான்
அன்புடன் பேசி என்னை அணைத்துப் பிடித்து இழுத்தான்
அதரம் கனிய முத்தம் அமுதமெனக் கொடுத்தான்
துன்பம் பிறப்பிறப்பு சோர்வுமில்லாதொழித்தான்
துன்பம் பிறப்பிறப்பு சோர்வுமில்லாதொழித்தான்
தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால்
தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால்
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்.