என் மொழிக்கும் உன் விழிக்கும் போர்

மொழிக்கும் விழிக்கும் என்ன சம்பந்தம்
என எனக்குத் தெரியாது
உன் விழி காணும் வரை
உன் விழியின் மொழி
என் தாய் மொழியை வம்புக்கும் அழைக்கிறது
எது சிறந்தது என்றும் போட்டியிடுகிறது
இறுதிப்போட்டியில் உன் விழி
வெற்றியும் கொள்கிறது என் தாய்
மொழியையும் கொல்கிறது
மறதி எனும் பெயரால்
மறவாது என் விழியில் உன் முகம்
மட்டும் பதித்து விட்டுச் சென்றது
உன் விழி இரண்டும்
இனி எந்தன்
வழியெல்லாம் உன் அழகிய விழிகளின்
மொழியேயன்றி வேறு மொழியன்று.

எழுதியவர் : எழில் குமரன் (31-Jan-16, 11:49 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 86

மேலே