சாதிகள் சத்தியமாய் அழியப்போவதில்லை

சாதி எனும் வியாதி நிறைந்து
சத்தமில்லாமல் சமூக சத்தை எடுக்கும்
சாதிகள் மறைந்து போகும் நாள்
சத்தியமாய் யாரும் காணப் போவதில்லை
சாதிப் பெயர்கள் இருந்து போக
சாதிய உணர்ந்து மலிந்து போக
உயர்ந்தவன் என்று நீ நினைத்தால்
உன்னை விட உயரத்தில் ஒருவனிருப்பான்
பிறக்கும் போதே பிள்ளை நெஞ்சில்
சாதி உணர்வை விதைத்து விடா
சாதி என்பதை சாக்கடையில் இட்டு
சமத்துவத்தை என்பதை சந்தையில் இடுவோம்
சோறு உண்ண நீ உழைக்கிறாய்
சாதியால் எப்படி நீ தழைக்கிறாய்
சண்டைகள் இன்றே நிறுத்தி விடுவோம்
சாதியை இன்றே வெறுத்து விடுவோம்
புது உணர்வை பூமியில் விதைத்து
புது விழியால் உலகம் பார்ப்போம்

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன் ) (1-Feb-16, 9:45 pm)
பார்வை : 81

மேலே