அலைகளும் நானும் ஓன்றுதானடி 555

அடியே...

நீ கடலுக்கு சென்று
இருக்கிறாயா...

கிராமத்து குளத்தினை
நீ கண்டு இருக்கிறாயா...

அலைகள் விழுந்து
விழுந்து வந்தாலும்...

கரையை தொடாமல்
செல்வதில்லை...

நீ எனக்கு கொடுக்கும்
அவமானங்கள் புதிதல்ல...

உன்னை நான் தொடர்ந்த நாள் முதல்
எனக்கு கிடைப்பது இதுதானே...

நான் நீர் போல...

உன் உள்ளத்தினை தொட நான்
தொடர்ந்துகொண்டே இருப்பேன்...

உன்னை மட்டும்
நேசிக்கின்ற இதயம்...

உனக்காகவே துடித்துக்கொண்டு
இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்...

என் மூச்சி உள்ளவரை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Feb-16, 8:25 pm)
பார்வை : 268

மேலே