சிநேகிதியே

சிநேகிதியே
""""'''''''''''""""""""
சிநேகிதியே!
முற்றத்து மல்லிகை
வாசம் குடித்து
அடித்து பிடித்து
விளையாடிய நாட்கள்
ஸ்தம்பிச்சு போச்சு இன்றைய
நினைவில்!

பள்ளிசீருடை தொடங்கி
செம்பாட்டு புழதி கடந்து
தாவணிதொடர்ந்தும், சினேகிதங்களில்!
ரகசியங்களை
பொத்திவைக்க முடிவதில்லை!

விரையமாகும் நாட்களை
இழுத்து பிடித்து பிரியங்களை
வளர்த்திருந்தோம்!

பொண்ணு பார்த்து
கல்யாணம் முடிச்சு
புகுந்தவீடு போகையில்,
கட்டிப்பிடித்து கதறிஅழுதாய்!
பிரிவொன்றை தந்துவிட்டு
பிரிக்கமுடியாதென்றாய்!

உனக்கான வெற்றிடத்தில்
உன் நினைவுகளை இருத்தி
வைத்து அழகு பார்க்கிறேன்!

கரைந்துபோன அடுத்துவரும்
காலங்களில் உன் தொடர்புகள்
முற்றாக துண்டிக்க!
பட்டாக அரைத்த மருதாணியில்
அவநம்பிக்கை சாயங்களே அதிகம் அதில் நீ சிவக்கவில்லை!

பக்குவப்பட்ட மனநிலை ஒன்றில்
உனது தேவைகளிலும் கடமையிலும் நீ மூழ்கியிருப்பாய்
என்று எனக்கான சமாதானத்தை
உனக்காக சொல்லியிருந்தேன்!

உனது ஞாபகங்களுக்காக
முற்றத்து மல்லிகையை பிடித்து
உலுக்குகையில் !
விழுந்த பூ
ஒன்று வெட்கப்பட்டு
சொன்னது
நாளை நீயும் இப்படித்தான்"""
நானும் தரையில் பெருவிரலால்
கோலம் போட்டேன்
வெட்கத்தில்!

லவன்

எழுதியவர் : லவன் (4-Feb-16, 1:40 am)
சேர்த்தது : லவன்
Tanglish : sinaegithiyae
பார்வை : 296

மேலே