யாதுமானவனே

தழும்புகள் வந்த பின்
தழுவுவதில்(தடவுதலில்)
என்ன பயன்!

சாவியை தொலைத்து விட்டு
பூட்டை குறை சொல்லி
என்ன பயன்!

நீரின்றி அமையாது உலகு பழமொழி
நீயின்றி அமையாது உலகு உயிர்மொழி......

ஒரு யுகமோ!
ஒரு நிமிடமோ!
உனக்காக நானும்
எனக்காக நீயும் என்று
வாழ்ந்து விட வேண்டும்.....

நம் இருவரில்
இறப்பு எவருக்கு
நேர இருந்தாலும்
இறுதியில்
பந்தயத்தில்
முதலில்
நான் (தான்) இருப்பேன்...


~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Feb-16, 1:51 am)
பார்வை : 126

மேலே