தேயாத இரவுகள் வேண்டும்

உன்னிரு கண்கள் கொண்டு என்
உலகை நான் பார்க்கிறேன்...
உறங்கநீ கண்மூடும்போது
உலகையே மறக்கிறேன்...
கன்னத்து குழிகளிலே உயிரே
என்வாழ்விடம் தேடுகிறேன்..
களைத்துநீ தூங்கும்போது
எட்டாம் அதிசயம் காண்கிறேன்...
என்தோளில் சாய்ந்து அணைக்கும்போது
நான் தூக்கத்தை ஜெயிக்கிறேன் ....
உயிரே...!!!
உறக்கத்தின் அசைவிலே என்
உயிரை நீ உசுப்புகிறாய்...!
இளஞ்சிவப்பு உதட்டசைத்து
இதயத்தை கசக்குகிறாய்....!
கிளிமூக்கின் அசைவினிலே
வாலிபத்தை வதைக்கிறாய்...
தேயாத இரவுகள் வேண்டும்
தேயாத இளநிலா உனைக்காண...
உன்னிரு கண்கள் கொண்டு என்
உலகை நான் பார்க்கிறேன்...
உறங்கநீ கண்மூடும்போது
உலகையே மறக்கிறேன்...

எழுதியவர் : காசி. தங்கராசு (4-Feb-16, 5:33 am)
பார்வை : 97

மேலே