என் மனமும் அதனோடு
தீட்டுக்கு ஒதுங்குவதில்லை
என் வீட்டில் குடியிருக்கும்சிட்டுக்குருவிகள்...
வண்ணத்துப் பூச்சிகளின்இறக்கைகளுக்குள்
குடியேறிவிடுகிறதுஅவ்வப்போது மனது...
என்ன தைரியம்
மின் கம்பியில் வரிசையாய் அமர்ந்திருக்கும்சிறு பறவைகள்...
வீரியமழைக்கு ஒரு பாடல்
மென் தூரலுக்கொரு பாடல்
குளிர் காற்றுக்கென்றொன்றாய்
விதவிதமாய் வெளியெங்கும்நிறைத்துப்போகும்
வெண் நாரைகளுக்கு
ராகங்கள் சுரங்கள் கட்டுப்படுகின்றன...
கொட்டிக்கிடக்கும் இலைச்சருகுகளுக்கிடையே
ஊர்ந்துபோகும் நீள் பாம்பிற்கு
இரையாகிவிடலாமென்ற
எச்சரிக்கையோடேபதுங்குகிறது வெள்ளெலி ..
என் மனமும் அதனோடே...