ஆழ் நட்புடன்

~~ ~ ~ ~ ~ ~
அந்த தென்றலின் சுகந்தம்
வீசும் பூங்காவில்
ஓர் இருக்கை.
நானும் என் எதிரே
என் நீண்ட கால நட்பும். ..
அது தான் இந்த அண்ட சராசரத்தின்
ஆனந்தப் பெருவெளியின்
என் முனைப்பேனா ..
பல ஆண்டுகளாக தொடர்ந்து
என்னை பண்படுத்திய நட்பு இது !
பேசி முடித்த மௌனங்களில் மனங்களில்
கரைகிறது இந்த அமைதி
எனக்கும் அவனுக்குமான
நீள் புரிந்துணர்வு !
நீயும் என்னை அறிந்தவன் தான்
அதனால் தான்
காகிதக் கிடங்கில்
நிறைகிறது தினமும். ...
ஒரு நாள் அலட்சியமாக எறிந்த
காகிதத் துண்டொன்றில்
எழுத்துக்களால் கீறப்பட்ட
உன் அழகு முகத்தில் கண்ணீர்க்கறை
என் மரணப் படுக்கையிலும்
நீ தான் நீ தான் என் நண்பன்
என அலறித் துடித்தாய்....
நான் மரணிக்கவில்லை
துடிப்போடு உயிர் விட்டேன்
அன்றும் நீ தான்
என் நினைவுப் பேருரை வாசித்தாய் !
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (6-Feb-16, 5:11 am)
சேர்த்தது : தமிழ் உதயா
Tanglish : aazh natbudan
பார்வை : 77

மேலே