ராங் நம்பர்
தூரத்தில் ..
ஒரு நகரத்தின் மினுக்கிடும் இரவில்
எனது வாகனம் இருளில் நின்று போனது
குளிருக்கு வசதியாகி ..
என்னை நடுங்கச் செய்த நேரம்
யாருமற்ற அந்த நெடுஞ்சாலையில்
அருகில் இருந்த மணற்குவியல் ஒன்றின்
ஆறுதலில் ஈரமண் தந்த சுகத்தில்
எனது கைப்பேசி ஒலித்திட..
அடுத்த முனையில் பேசியது யாரென
கேட்க முனைகையில்தான் ..
அவள் அருகில் வந்தாள்..
நான்தான் அழைக்கிறேன் ..
என்றாள்..
என்ன இது..?
குரல் மட்டும் கேட்கிறது..
உடல் மட்டும் தெரிகிறது..
கழுத்துக்கு மேல் தலை இல்லை..
கால்களில் பாதங்கள் இல்லை ..
நான் "ராங் நம்பர்"
என்றதும் ..
"இல்லை நீதான் நான் அழைத்த ஆள் "
என்று மீண்டும் சொல்லியபடி ..
என் கழுத்தை ...
..
இப்போது நான் கைப்பேசியில்
உங்களைத்தான் அழைக்க போகிறேன்!