ஆசைப் பெண்ணுக்கு

ஆசைப் பெண்ணுக்கு !
ஆடையை விரும்பாதவர்
ஆருமுண்டோ ? அகிலத்தில்….
அணிந்து பார்த்து அழகு சேர்ப்பாள்
அசைப் பெண்ணுக்கு ! பட்டாடை !
அம்மா
அப்பாவுக்கும் பிடிக்கும் !
அழகு ஆடைகள்
ஆயிரமாயிரம் ஆடைகள்
அணிவதென்பது அசைகள் !
ஆசையாடை போர்த்துவாள்
அன்பு காதலி !
அன்பு ஆடை உடுத்துவாள்
அன்னை !
அறிவு ஆடை வழங்குவார்
அப்பா !
ஆர்ப்பாட்ட கோஷத்தோடு
அணிந்து கொள்வார் பொன்னாடை
அரசியல் வாதி !
ஆடைகள் களைந்தால்
உடல் நிர்வாணம் !
ஆசைகள் களைந்தால்
மனம் நிர்வாணம் !
ஆடையா ? ஆசையா ?
களைவது என்பதில்
அவரவர் ஆசையே !
---- கே. அசோகன்.