உன் அருகில்

உதிர் காலமாக இருந்த
என் வாழ்க்கையில்
வசந்தகாலமாக வந்து
என் எதிர்கால
வாழ்க்கையை மாற்றியவளே!..
காலங்கள் தொடர்ந்து
கஷ்டங்களை கொடுத்தாலும்
உன் சிறு புன்னகையால்
வாழ்வின் பேரின்பத்தை கொடுத்தவளே!..
உன்னுடன் கழியும்
ஒவ்வொரு நாளும் நொடியாய் மாற
நீ இன்றி கழியும்
ஓர் நொடி கூட
யுகமாய் வாட்டுகிறதே என்னை!!..
என்ன சொல்வது ............
தோழியாய் வந்து
காதலியாய் மாறி
இன்று
துணைவியாய் என் கைகோர்க்கும் உனை
என்றும் மறவேன்!!..
என் பெண்மையே
என் உயிர் இவ்வுடல் நீர்த்தாலும்
என் மனம்
என்றும்
உன் அருகில் !!.....