காதல் கவிதை எழுதும் எண்ணம்

( என்ன சொல்ல ஏது சொல்ல - பாடல் மெட்டில் எனது பாடல் வரிகள் )

காதல் கவிதை எழுதும் எண்ணம்
உன்னால் கொண்டேன் உள்ளுக்குளே

என்னை எழுதி உன்னை எழுதி
நம் பெயரை சேர்த்தேன் அதுவே கவிதை

ஆகாயத்த பார்த்த உந்தன் கையை கோர்த்த
என்னை நானும் பார்த்தேன் (அழகு) காதல் ஓவியம்

விட்டு விட்டு துடிக்கும் எந்தன் நெஞ்சின் துடிப்பும்
உந்தன் கள்ள சிரிப்பும் இன்ப காதல் கீதங்கள்

கண்ணோடு நீ நெஞ்சோடு நீ
எல்லாமே நீ என்றாகினாய்
தாயாகவும் சேயாகவும்
நான் மாறினேன்

கண்ணோடு நீ நெஞ்சோடு நீ
எல்லாமே நீ என்றாகினாய்
தாயாகவும் சேயாகவும்
நான் மாறினேன்

எண்ணாமல் எண்ணத்தில் உன் ஞாபகம் வந்து
உன் ஞானபகம் வந்து என்னை அழைக்குது
என்காதல் உன்காதல் மாறாத காதலென்று
மாறாத காதலென்று பேர் கொள்ளனும்

ஆறாத காயமும் உள் நெஞ்சின் சோகமும்
மாயாவி நீ வந்தால் மாய்ந்து போகுது
வாடாத பூக்களால் நீ மாலை சூடினாய்
அன்றோடு என் மாலை நேரம் காலை யானது ...!!

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (8-Feb-16, 4:26 pm)
பார்வை : 235

மேலே