சிறகு விரிந்தது
நிலவொளியில் குளித்து
மலர் மஞ்சம் சேர்த்து ஆடை கட்டி
விழி ஜாடை காட்டி
என் முன்னாள் வந்து நின்றாள்.
புன்னகையை பொன்னகையாய் அணிந்து
எனை கண்களால் சிறை செய்தாள்
தங்கத்தாமரை.
மாற்றங்கள். தடுமாற்றங்கள்.
வார்த்தைகளின் சடுகுடு சத்தம்
என் மூளையில் ஓங்கி ஒளித்துக்கொண்டு இருந்தது.
பேசிக்கொண்டிருந்தபோதே என் மௌனம்
என்னைப் பற்றிக்கொண்டது.
அவள் கண்களின் முன்னால் கண்ணதாசனும் தடுமாரியிருப்பார்.
உண்மையே!
வார்த்தைப் பஞ்சம் புலவனுக்கும் ஏற்படும்.
அவன் காதலி அழகை கண்களால் அளக்க நேர்ந்தால்.
என் கண்கள் இரண்டும் உருண்டோடி அவள் இடையில் சறுக்கி ஆடின.
அவளின் ஏக்கக் காடுகளில் தீ . எரியட்டும் இரவு முழுதும்.
கரையும் நொடியில் குறையும் இடைவெளி
என்னைப் பால்வெளிக்கு அழைத்துச் சென்றது.
முட்டிக்கொண்டு முளைத்தன சிறகுகள்.
தவறு என்று தோன்றவில்லை.
பறந்து விட்டோம் சிறகை விரித்து.