அதிசயக்குழந்தை -எழுத்து

அதிசயக்குழந்தை -எழுத்து
----------------
அழகான வர்ணம் பூசிய .....
ஒரு வீட்டின் வெளிப்புற ....
சுவரில் அதியக்குழந்தை....
கிறுக்கி விளையாடி....
கொண்டிருந்தான்.......!!!

டேய்
சுவரை அசிங்க படுத்தாதே....
என்று கொஞ்சம் கோபத்தோடு ...
ஆசான் என்ற போர்வையில் ....
அவனை அதட்டினேன் ....!!!

சிரித்த படியே .....
சொன்னான் - ஆசானே ....
நீங்கள் தானே சுவர் இருந்தால் .....
சித்திரம் வரையலாம் என்றீர்கள் ....
நான் அதைதானே செய்கிறேன் ...!!!

குழந்தாய் ...
அந்த சுவர் என்றது ....
உடம்பை குறிக்குமடா....
ஆரோக்கியம் இருந்தாலே ....
சாதிக்கலாம் என்பதாகும் .....!!!

ஆசானே ....
உடம்பும் ஒரு கலவைதானே ....
அது இருக்கட்டும் ஆசானே ....

உணர்வுகளின் ஓசை மொழி ....
ஓசையின் பரிமாணம் பாஷை....
பாசையின் அலங்காக வடிவம் ....
எழுத்து - எழுத்தின் " கரு" கிறுக்கல் ...
அதேயே செய்தேன் ஆசானே ....
கிறுக்கியது தவறு இல்லை ....
உங்களுக்கு புதிய சுவர் ...
என்பதுதானே கவலை ....
மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 08

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Feb-16, 9:50 pm)
பார்வை : 89

மேலே