திருப்பூவணம் பதிகம் 5

"குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த
பெருந்தகை அடிதொழப் பீடை இல்லையே" 5

பதவுரை:

குருந்து - ஒரு தனித்தன்மையுடைய அபூர்வமான மரம்,
அரும்திறல் - மிகுந்த வலிமை,
பீடை - தீவினையால் நிகழும் துன்பம்,
பெருந்தகை - சிவனுக்கு ஒரு பெயர்.

பொருளுரை:

குருந்து, மாதவி, கோங்கு போன்ற அரிய மரங்களும், மல்லிகை கொடிகளும் வளர்ந்து மலர்ந்துள்ள சோலைகளை உடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றவன். மிகுந்த வலிமையுடைய அசுரர்களின் கோட்டைச்சுவர்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்த பெருமைக்குரியவன் சிவபெருமான்.

இத்தகைய தன்மைகளையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழும் அன்பர்களுக்கு தீவினையால் நிகழும் துன்பம் அனைத்தும் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-16, 8:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே