ஊடல்கள் தீராதா

ஏன் இன்னும் தாமதம்
போதும் நாடகம்
வானம் கார்முகம் பூண்டதும்
வனமோ வானம் பார்த்து வாசல் மூடுமா

அதுபோல் தான் உன் கோபம் மறுப்பேனா
அதுவந்தால் தான் லாபம் கண்டேன்
இன்னும் வேண்டியே நின்றேன்
கலையும் பொழுதில்

அசைவின்றிருந்த
இறகின்று நிகழ்ந்த
நிகழ்வதில் கிறங்க
இனிதொருப் பொழுதின்

புழுதிப் புயலில்
புகுந்த அப் பயனில்
மிதந்து சுமையின்றி எளிதாக மேலெழ
புவியின் வான் வெளியினை
முட்டித் தான் போனது போலவே

சிறியேன் என் கோலாறை மன்னித்து
சரிவிடு எனும் வார்த்தை அறிவித்து
வரி ஏதும் இல்லாத வானம் கொள்ளாத
கவி எழுதுவோம்
இதுவரைப் போகாத சுவடுகள் காணாத
எல்லை மீறுவோம்

முடிவா முறைத்து
முடிவுறை எழுதவிடு
என் வீட்டின் ஓட்டில்
தூளியை சேர்த்து
துன்பத்தை ஆற்று
ஏன் முதல் முத்தம் தர
தாமதம் ஆகுதே
தாமரை வேகுதே

வாடி புள்ள
நீ உள்ள
என்ன ஊடல்கள் ஆகாதா
சின்ன கள்ள
மின்னல் கொல்ல
மீண்டும் காதல் தான் வாராதா

பெருமழைக்காட்டில் மது ஊற்றில்
மூழ்க ஊடல்கள் தீராதா
சின்னஞ்சிறு கீற்றின் இளஞ்சூட்டில்
என்னுயிர் இன்று மீளாதா
அருகினில் வா

எழுதியவர் : இராஜ ராஜன் (11-Feb-16, 9:30 am)
சேர்த்தது : Radja Radjane
பார்வை : 108

மேலே