காதலை சொல்வதை விட செய்

இரு ரகசியங்களின் கோர்ப்பு.... இந்தக் காதல்...

காதலை மட்டும்தான் கற்று மறக்க முடியாது...

வழி நெடுக காதலை சிந்திக் கொண்டே செல்கிறாள் காதலிக்கத் தொடங்கியவள்...

முத்தங்களால் கட்டப்படுகிறது காதல்...

எண்ணங்களால் ஆகிறது காதல்...

எல்லாருக்கும் ஒரு ரகசியக் காதல் இருக்கிறது...

காதலைக் கடக்க கடக்க காதலே...

கனவு மாற்றிக் கொள்கையில் பித்து நிலை காதல்...

தானாக பூத்து தானாக முளைத்து, தானாக வளர்ந்து தானாகவே மரமாகிறது காதல்...

காதலிப்பது தவம்... காதலிக்கப் படுவது வரம்...

கலைந்து விழுந்தாலும் காதல் தான்...

காதலை சொல்வதை விட செய்...

தலையும் தலையும் முட்டிக் கொண்டு குழந்தையாகிறது காதல்..

கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-Feb-16, 11:50 am)
பார்வை : 299

மேலே